Presidential Secretariat of Sri Lanka

சனாதிபதியின் செயலாளர்

திரு.உதய ரஞ்ஜித்  செனெவிரத்ன, இலங்கை சனாதிபதியின் செயலாளர்

ஆரம்ப கால வாழ்க்கையும் கல்வியும்

கேகாலையில் ஒரு நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்ந்த உதய ரஞ்ஜித் செனெவிரத்ன 1958 இல் பிறந்தவர் ஆவார். அவர் தனது முதனிலைக் கல்வியை கண்டி தர்மராஜ கல்லூரியில் பெற்றுக் கொண்டதோடு தனது இரண்டாம் நிலைக் கல்வியை மாத்தளை விஞ்ஞானக் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். அவர் 1977 இல் களனிப் பல்கலைக்கழகத்தில் பிரவேசித்து விஞ்ஞானப் பிரிவில் 1980இல் விஞ்ஞான இளமானிப் பட்டத்தைப் பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் அவர் கொழும்பு பல்கலைக்கழகத்திலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்திலும் பல பட்டப் பின்படிப்பு டிப்ளோமா கல்வி நெறிகளை பூர்த்தி செய்தார். இது கொழும்பு பல்கலைக்கழகத்தில் (1989 – 1990) ஒரு சமுக அபிவிருத்தி பட்டப் பின்படிப்பு டிப்ளோமா மற்றும் உள்ளூராட்சியில் (1992-1993) பட்டப் பின்கல்வி டிப்ளோமா முகாமைத்துவத்தில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் ( 1997- 1998) முகாமைத்துவத்தில் ஒரு பட்டப் பின்கல்வி டிப்ளோமா  என்பவற்றை உள்ளடக்குவதாகும்.  1999 இல் திரு.செனெவிரத்ன களனிப் பல்கலைக்கழகத்தில் வெகுசனத் தொடர்பாடல் பிரிவில் ஒரு விஞ்ஞான முதுமானிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.

திரு.செனவிரத்ன தனது கல்விப் புலமைத் தகைமைகளுக்கு மேலதிகமாக எண்ணிறந்த துறைகளில் பல தொழில்சார் தகைமைகளையும் பெற்றுக் கொண்டவர் ஆவார். இவை கொழும்பு பல்கலைக்கழகத்தின் உயர் நிலை ஆங்கிலத்தில் டிப்ளோமா இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் சந்தைப்படுத்தல் முகாமைத்துவ டிப்ளோமா, இந்திய பெங்களூர் கூட்டுறவு முகாமைத்துவ நிறுவகத்தின் கூட்டுறவு சந்தைப்படுத்தலுக்கான டிப்ளோமா இஸ்ரேல் ஹிஷ்தாருள் சருவதேச நிறுவகத்தின கூட்டுறவு மனித வளங்கள் அபிவிருத்தியில் சருவதேச தொழில்முயற்சித் திறன்களுக்கான நற்சான்றிதழ் இலங்கை அபிவிருத்தி நிறுவகத்தின் பொது நிருவாகத்திற்கான சான்றிதழ் கொழும்பு பல்கலைக்கழகத்தின் வாழ்க்கை நெறிகளுக்கான ஆங்கில சான்றிதழ், நெதர்லாந்து Capital CBI இனால் ஒழுங்கமைக்கப்பட்ட பொது ஏற்றுமதி சந்தைப்படுத்தல் சான்றிதழ் சருவதேச கற்கைகளுக்கான பண்டாரநாயக்க நிலையம் நடாத்திய தொழில்சார் ராஜதந்திரம், ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்கள் குறித்த சான்றிதழ்  வியாபாரத் தொழில் முகாமைத்துவத்துக்கான தேசிய நிறுவகத்தின் சந்தை சாத்தியத் தகவு, கருத்திட்டம் தயாரித்தல் சம்பந்தமான சான்றிதழ், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவகத்தின் பொது முகாமைத்துவம் சம்பந்தமான சான்றிதழ், அதே நிறுவகத்தின் மனித வளங்கள் முகாமைத்துவத்துக்கான சான்றிதழ், அவுஸ்திரேலிய சதேர்ன் குயீன்ஸ்லன்ட் பல்கலைக்கழகத்தின் பொதுத்துறை சிரேஸ்ட நிறைவேற்றுநர்களுக்கான தொழில்சார் அபிவிருத்தி சான்றிதழ், அவுஸ்திரேலியாவின் நாணயக் கடன் ஐக்கிய மன்றத்தின் ஆசிய கூட்டு சமஷ்டி அமைப்பின்  நுண்ணியல் நிதியளிப்பு மற்றும் நுண்ணியல் தொழில்முயற்சி அபிவிருத்தி என்பவற்றில் தொழில்சார் பயிற்சி மற்றும் இத்தாலி, டியூறின், ILO பயிற்சி நிலையத்தின்  கூட்டுறவுக் கொள்கை மற்றும் சட்டவாக்கம் சம்பந்தமான தொழில்சார் பயிற்சி என்பவற்றை உள்ளடக்குவதாகும்.

வாழ்க்கைப் பணி சாதனைகள்

திரு செனெவிரத்ன தனியார் துறையிலும் பொதுத் துறையிலும் சீரிய நீண்டகால வாழ்க்கைப்பணியை மேற்கொண்டவர் ஆவார். தனியார் துறையில் ஒரு முகாமைத்துவப் பயிற்சியாளராக (லீவர் பிறதேர்ஸ் சிலோன் லிமிட்டெட்) ஆகவும், சந்தைப்படுத்தல் உத்தியோகத்தராகவும் (யுனைட்டட் மோட்டேர்ஸ்)  ஏற்றுமதி நிறைவேற்று உத்தியோகத்தராகவும் (கப்பிற்றல்   CW மக்கி அன்ட் கம்பனி) இந்த இடங்களில் அவர் தனியார் துறை செயற்பாடுகளில் பாரிய அனுபவத்தை திரட்டியுள்ளார். 1984 இல் செனெவிரத்ன இலங்கை நிருவாக சேவையில் ஓர் இயங்குநராக இணைந்ததோடு 1985 இல் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின்  உதவி ஆணையாளராகப் பணியாற்றத் தொடங்கினார். 1995 வரையில் இலங்கை கைத்தொழில் கூட்டுறவு சங்கத்தில் உதவிப் பொது முகாமையாளராக பல்வேறு பதவிகளை இத்திணைக்களத்தில் வகித்தார். மாத்தளையிலும் மத்திய மாகாணத்திலும் கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தின் உதவி ஆணையாளராக பணியாற்றியதோடு மத்திய மாகாணத்தில் அதே திணைக்களத்தில் பிரதி ஆணையாளராகவும் பணியாற்றினார். 1995 இல் பொல்கொல்லையில்  கூட்டுறவுப் பாடசாலையின் அதிபராக அவர் நியமிக்கப்பட்டது கூட்டுறவு அபிவிருத்தித் திணைக்களத்தில் அவர் வகித்த பாத்திரத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது.  அவர் 2001 இல் பொல்கொல்லையில் தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படும்வரை அவர் இந்த செல்வாக்குமிக்க பதவியை வகித்தார். அவர் 2006 வரை இப்பதவியில் நீடித்திருந்தார். இவ்வாறாக 21 வருட காலமாக திரு.செனெவிரத்ன இலங்கையில் கூட்டுறவுகள் அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கினார்.

திரு.செனெவிரத்ன கூட்டுறவுத் திணைக்களத்தைவிட்டு நீங்கிய காலத்திலிருந்து பொதுத் துறையில் பல்வேறு நிறுவனங்களில் மிக முக்கியமான பதவிகளை வகித்தார். 2006 இலிருந்து நான்வருட காலமாக அவர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சிலும், திறைசேரியிலும் மேலதிக செயலாளராகவும் திறைசேரியின் பிரதிச் செயலாளராகவும் விளங்கினார். நிதி திடடமிடல் மற்றும் முகாமைத்துவம் சம்பந்தமான இந்த அனுபவச் செழுமையுடன் 2010 இல் அவர் விளையாட்டு அமைச்சில் அதன் செயலாளராக இணைந்து கொண்டார். அன்றிலிருந்து 2018 வரையில் பல  அமைச்சுகளில் உற்பத்தித் திறன் ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர் தெங்கு அபிவிருத்தி மற்றும் மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்தி  அமைச்சின் செயலாளர், சீனிக் கைத்தொழில் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் பெருந்தெருக்கள் உயர் கல்வி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர், பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் செயலாளர், மகாவலி அபிவிருத்தி மற்றும் சூழல் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் மற்றும் விஞ்ஞானம் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சின் செயலாளர் பதவிகளை வகித்துள்ளார். ஒரு சிறு காலப்பகுதிக்கு அவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிலும் ஒரு மேலதிகச் செயலாளராகப் பணியாற்றியுள்ளார்.

மேலதிகப் பொறுப்புகள்

திரு.செனெவிரத்ன அவர்கள் ஏற்றுக் கொண்ட மேலதிகப் பொறுப்புகள் பல்வேறு வகையினவாக அமைந்துள்ளதோடு பல்வேறு காலப்பகுதிகள் பல்வேறு பதவிகளில் கருமப்படக்கூடிய அவரின் ஆற்றலுக்கான எடுத்துக்காட்டாகவும் விளங்குகின்றன. அவர் தேசிய லொத்தர் சபையில் பணிப்பாளர் சபை அங்கத்தவராகவும் ஆணையாளராகவும் (2007- 2009) , இலங்கை சூழல் அதிகாரசபை (2007-2009)  தேசிய கல்வி ஆணைக்குழு (2007-2010)   ஊழியர் நம்பிக்கை நிதிய சபை (2008-2009)  தேசியத் திரைப்படக் கூட்டுத்தாபனம் (2009-2010),   தெலாரு லய்கா லிமிட்டெட் (2008-2009) பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (2009-2010), செல் காஸ் கம்பனி லிமிட்டெட் (2009-2010) , தேசிய காப்புறுதி நம்பிக்கை நிதிய சபை (2008-2010),  உயர் நீதிமன்ற தொகுதி முகாமைத்துவ சபை (2007-2009), சுயாதீன தொலைக்காட்சி வலையமைப்பு (2009- 2010) மற்றும் சிறிலங்கா ரெலிகொம் லிமிட்டெட் (2008-2009)  என்பவற்றிலும் பணியாற்றியுள்ளார்.

2001 மற்றும் 2005 இல் திரு செனெவிரத்னவுக்கு சிரேஷ்ட பகிரங்க உத்தியோகத்தர்களுக்கான அவுஸ்திரேலியா சதேர்ன் குயின்லன்ட் பல்கலைக்கழகத்ததுக்கான சனாதிபதி புலமைப்பரிசு வழங்கப்பட்டது. இது இலங்கை தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவகம் மற்றும் சதேர்ன் குயின்ஸ்லன்ட் பல்கலைக்கழகம் என்பவற்றால் கூட்டாக வெளியிடப்படும்  செல்வாக்குமிக்க கூட்டுறவு அபிவிருத்தி சஞ்சிகையின் முகாமைத்துவ பதிப்பாளராகக் கடமைப்படும் சந்தர்ப்பத்தை அவருக்கு வழங்கியது.

திரு. செனெவிரத்ன விசேடமாக கூட்டுறவு அபிவிருத்தி சம்பந்தமான பல பிரசுரங்களை வெளியிட்டுள்ளார். அவர்  கூட்டுறவு இயக்கத்தின் ஊடாக இலங்கை கூட்டுறவு  அபிவிருத்தி மற்றும் தேசிய அபிவிருத்தி குறித்த சஞ்சிகையின் பிரதம பதிப்பாசிரியராக விளங்கினார்.   பொல்கொல்லை கூட்டுறவு பாடசாலையினால் வெளியிடப்படும்  ‘பிபீசும’ சஞ்சிகையின் பதிப்பாசிரியராக / ஆலோசகராகவும் விளங்கினார். அவர் கூட்டுறவு அமைச்சின் வருடம் இருமுறை வெ ளியீடாகிய ‘சுசன்ஹித்தவின்’  பதிப்பாசிரியர் சபையின் அங்கத்தவராக இருந்தார்.

திரு.செனெவிரத்ன சம்பிக்கவின் கணவர் என்பதோடு அவர்களுக்கு ஒரு மகனும் , மகளும் உள்ளனர்.

Visits: 374

Follow us

Don't be shy, get in touch. We love meeting interesting people and making new friends.

Most popular