Presidential Secretariat of Sri Lanka

OGP என்றால் என்ன

OGP என்றால் என்ன ?

OGP என்பது அரசாங்கங்கள் ஒளிவுமறைவின்மையை முன்னேற்றுவதற்கான அர்ப்பணிப்பணிப்பைச் செய்துகொள்ளும் வகையிலான ஊக்குவிப்பை வழங்கி, குடி மக்களுக்கு அதிகார வலுவை வழங்கி ஊழலுக்கு எதிராக செயற்பட்டு அரசாங்கங்களை வலுப்படுத்தும் வகையில் புதிய தொழில்நுட்பங்களை பிரயோகிப்பதற்கும், ஒருவருடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் நாட்டில் உள்ள சிவில சமூகத்துடன் பங்குடைமையை நடைமுறைப்படுத்தவும் உதவும் ஒரு பன்முகத்தன்மைகொண்ட முன்னெடுப்பு ஆகும். OGP 2011 செப்ரெம்பர் 20ஆம் திகதி தாபகர்களான எட்டு அரசாங்கங்கள் (பிரேஸில், இந்தோனேசியா, மெக்சிக்கோ, நோர்வே, பிலிப்பீன்ஸ், தென்னாபிரிக்கா, ஐக்கிய இராச்சியங்கள் மற்றும் அமெரிக்கா) OGP பிரகடனத்தை அங்கீகரித்து, தமது நாடுகளின் திட்டங்களை எடுத்துரைத்தவேளையில்  விதிமுறையாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

தற்போது OGP யில் 70 அங்கத்துவ நாடுகள் இணைந்துள்ளன.  அழைப்பின்பேரில் அங்கத்துவம் வழங்கப்படுகின்றது.

இலங்கையும்   OGP அமைப்பும்
இலங்கை 2015 ஒக்ரோபரில் OGP இல் இணைந்து கொள்ளுமாறு அழைக்கப்பட்டது.

2015 ஒக்ரோபரில் அழைப்பின்பேரில் மெக்சிக்கோவில் இடம் பெற்ற OGP உச்சிமாநாட்டில் இலங்கை பங்குபற்றி, பிரகடனத்தை அங்கீகரித்ததன் மூலம்    OGP யின் ஒரு பங்கேற்பு நாடாக மாறியது.  இத்தூதுக்குழுவுக்குஅந்த வேளையில் நீதி அமைச்சராக விளங்கிய கௌரவ விஜேதாச ராஜபக்‌ஷ தலைமை தாங்கினார்.

Most popular