Follow Us:

Friday, Nov 14
செப்டம்பர் 30, 2025

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாரளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலகத்தில்

அதுருகிரிய மகாமாத்ய வித்யாலயத்தின் மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வு ஜனாதிபதி அலுவலக பழைய பாராளுமன்ற சபா பீடத்தில் இன்று (30) நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் இலங்கை பாராளுமன்ற தகவல் தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக செயல்படுத்தும் ‘Vision’ நிகழ்ச்சித் தொடருடன் இணைந்ததாக மகாமாத்ய வித்யாலயத்திற்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

இதன் போது அந்த மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்கால தலைமைத்துவம், பாராளுமன்ற மரபின் வரலாறு மற்றும் பாராளுமன்றத்தின் வகிபாகம் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

 

மாணவர் பாராளுமன்றத்தின் ஆரம்ப அமர்வைத் தொடர்ந்து , சபாநாயகர் நியமனம், சபாநாயகர் பதவிப் பிரமாணம், பாராளுமன்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் மற்றும் மாணவர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பங்கேற்புக்கான சான்றிதழ்கள் வழங்குதல் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டன.

 

ஓராண்டு காலமாக ஜனாதிபதி அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்ட பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்கள் தொடர்பாக தொகுக்கப்பட்ட விசன் சஞ்சிகை பிரதி சபாநாயகர் அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வும் இங்கு இடம்பெற்றதுடன் இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடையாளப்படுத்தும் வகையில் பாடசாலைக்கு மதிப்புமிக்க மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.

 

இலங்கைப் பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி, ஜனாதிபதியின் சட்ட ஆலோசகர் சிரேசஷ்ட சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார, ஜனாதிபதி மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் டி. கமகே, இலங்கை பாராளுமன்றத்தின் பணிப்பாளர் (சட்டவாக்கச் சேவைகள்) மற்றும் பதில் பணிப்பாளர் ( தொடர்பாடல்) ஜயலத் பெரேரா, ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகள் ஒருங்கிணைப்பு பிரிவு உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, பாடசாலை அதிபர் எச். ஏ. காமினி ஜயரத்ன , ஆசிரியர்கள், பெற்றோர் உட்பட பலர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top