Follow Us:

Wednesday, Mar 19
பிப்ரவரி 25, 2025

ஜனாதிபதிக்கும் இராணுவ உயரதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

இலங்கையின் தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்த கலந்துரையாடலொன்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (25) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இராணுவ உயர் அதிகாரிகளுடனான இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கையின் பாதுகாப்பு நிலைமை தொடர்பான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.

பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தக் கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.

Top