Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1407 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1407 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்தியர் நிஹால் ஜயதிலக்க தனது மே மாத சம்பளம் 119,374 ரூபாவையும் கடுவெல மாநகர சபை 743,620 ரூபாவையும் கொவிட் நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தனர்.

கூட்டுரிமை வீட்டு முகாமைத்துவ அதிகார சபை (Condominium) 10,000,000 ரூபாவையும் கல்கமுவ திருமதி டப்ளியு.எச்.பொடியம்மா 25,000 ருபாவையும் பாதெனிய திருமதி திலினி நிசங்சலா நரசிங்க 5,000 ரூபாவையும் பிங்கிரிய டப்ளியு.எம்.ஜே.கெம்லஸ் 10,000 ரூபாவையும் திருமதி இந்திரானி வீரதுங்க 225,000 ரூபாவையும் பொலன்னறுவை இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம், மத்திய கலாசார நிதியம் – ஆலாஹன பிரிவெனா செயற்திட்டம் 500,000 ரூபாவையும் டப்ளியு.எச்.தீரக 50,000 ரூபாவையும் கொவிட் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்திருந்ததுடன், பிரதமர் குறித்த காசோலையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

HNB Finance Ltd நிறுவனம் 2,500,000 ரூபாவையும் மத்திய வங்கி ஓய்வூதியர் நலன்புரி அமைப்பு 557,000 ரூபாவையும் கேகாலை ஆர்.எம்.விஜேசிங்க 10,000 ரூபாவையும் மிஹிந்தலை திருமதி டி.ஆர்.எம்.தம்மவதி குணசேகர 10,000 ரூபாவையும் நேரடியாக அன்பளிப்பு செய்தனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,407,664,176.86 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular