Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1458 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1458 மில்லியனாக அதிகரித்துள்ளது.

இலங்கை அமரபுர மகாசங்க சபை 1,000,000 ரூபாவை அன்பளிப்பு செய்துள்ளது. குறித்த காசோலையை கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் ஸ்தாபக தேரர்களை நினைகூரும் நிகழ்வில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

விமானப் படையின் ஓய்வுபெற்ற ஆலோசகர் ஏ.எம்.குலதுங்க பண்டார 50,000 ரூபாவையும் திருமதி ஐரின் பெரேரா 5,000 ரூபாவையும் திரு.எம்.டி.எம்.கே.திசாநாயக்க 46,400 ரூபாவையும் திரு.டி.எல்.சந்திரதாச 5,000 ரூபாவையும் கொத்மலை பிரதேச செயலாளர் அலுவலகம் 28,400 ரூபாவையும் விசேட வைத்தியர் என்.டப்ளியு.ஜே.கே.பிரேமதாச 173,977 ரூபாவையும் மற்றும் விசேட வைத்தியர் ஏ.கே.பண்டார நாயக்க 171,133 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளார்கள்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,458,345,529.45 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.