Presidential Secretariat of Sri Lanka

கிராமங்களுக்கு வருகை தந்து மக்களின் குரல்களுக்கு செவிசாய்க்கும் ஜனாதிபதிக்கு மக்களின் பாராட்டு

கிராமம் கிராமமாக சென்று மக்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து அவற்றுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் முன்னெடுத்து வருகின்ற புதிய வழிமுறைக்கு மக்கள் தமது பாராட்டை தெரிவித்தனர்.

பொதுக் கூட்டத்திற்கு மாற்றமாக பின்பற்றிவரும் புதிய வழிமுறையின் மூலம் வீண்செலவுகள், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் போன்றவைகளால் சூழல் மாசடைவதும் தடுக்கப்பட்டுள்ளது. உண்மையான நிலையை ஜனாதிபதி அவர்கள் அறிந்துகொள்வதோடு அதிகமான பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதும் பாராட்டுக்குரியது என்று மக்கள் தெரிவித்தனர்.

பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற அபேட்சகர்களின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் இன்று (30) கம்பஹா மாவட்டத்திற்கு இரண்டாம் தடவையாகவும் சுற்றுப் பயணம் ஒன்றை மேற்கொண்டிருந்த ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் இவ்வாறு தெரிவித்தனர்.

நீர்கொழும்பு களப்பு மற்றும் கண்டல் தாவரத்தின் அழிவை தடுத்து களப்பை அபிவிருத்தி செய்து தருமாறு முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்ஷா நீர்கொழும்பு வெல்லப்பிட்டிய விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

அபேட்சகர் ஆனந்த ஹரிஸ்சந்திர கட்டான, வலிசிங்க ஹரிஸ்சந்திர விளையாட்டரங்கில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்தவர்களிடம் சுமூகமாக கலந்துரையாடினார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மற்றும் கொவிட் 19 காரணமாக விமான நிலையம் மூடி இருப்பதனால் வாடகை வாகன சாரதிகள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கவனம் செலுத்துமாறு ஜனாதிபதி அவர்கள், அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.

கழிவுகளை அகற்றுவதற்கு உரிய பொறிமுறை ஒன்றை உருவாக்கி முத்துராஜவெல சதுப்பு நிலத்தை பாதுகாக்குமாறு மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர். வடமத்திய மாகாணத்தில் சிறுநீரக நோயாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அனைத்து மாகாணங்களுக்கும் வழங்குமாறு ஜனாதிபதி அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க உடுகம்பொல சந்தை வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களுக்கு மக்கள் அமோக வரவேற்பளித்தனர்.

திரு.விக்கும் சம்பத் திம்புல்கஸ்ஹேன உருவாக்கிய கழிவு மீள்சுழற்சி இயந்திரம் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. ஒரு மணித்தியாலத்தில் 15 டொன் இரும்பு, பிளாஸ்டிக் மற்றும் காபன் என்று பிரிபடும் வகையில் கழிவு மீள்சுழற்சி செய்யக்கூடியமை இவ் இயந்திரத்தின் சிறப்பம்சமாகும். இரசாயனப் பொருட்களை பாவிப்பதன் மூலம் துர்நாற்றம் வீசுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் முழுச் செயற்பாட்டையும் கண்காணிப்பு கருவி மூலம் தொடர்ச்சியாக அவதானிக்க முடியும்.

பண்டாரவத்தை பராக்கிரம வித்தியாலயத்தில் தரம் 05இல் கல்வி கற்றும் செனுர பிரபாஷ்வர எனும் மாணவன் கொவிட் நிதியத்திற்கு தனது சேகரிப்பில் இருந்த பண உண்டியல் ஒன்றை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

அபேட்சகர் லக்ஷ்மன் குணவர்தன கம்பஹா நகர சபை வாகனத் தரிப்பிடத்திற்கு அருகில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், வருகை தந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

“சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் ஆரோக்கியமான சமூகமொன்றை உருவாக்கும் நோக்கில் விக்ரமாரச்சி  ஆயுர்வேத கல்வி நிறுவகத்தை பல்கலைக்கழகமாக தரம் உயர்த்துவதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையை பாராட்டி வர்த்தக கைத்தொழில், சேவைகள் முற்போக்கு ஊழியர் சங்கத்தினர் ஜனாதிபதி அவர்களுக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கினர்.

சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்பதற்கு கடுமையான சட்டதிட்டங்களை ஏற்படுத்துமாறு  அபேட்சகர் நாலக்க கொடஹேவா கம்பஹா நகரில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் மக்கள் கேட்டுக்கொண்டனர். கல்விகற்றவர்கள் மற்றும் திறமைசாலிகளை பாராளுமன்றத்திற்கு அனுப்புவற்கான சந்தர்ப்பத்தை மக்களுக்கு  ஏற்படுத்தி தந்தமைக்கு ஜனாதிபதி அவர்களுக்கு வருகை தந்திருந்தவர்கள் தமது பாராட்டை தெரிவித்தனர்.

வெயாங்கொடை பழைய பஸ் தரிப்பிட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்களிடம் அபேட்சகர் பிரியந்த புஷ்பகுமாரவினால் வெயங்கொடை நகர அபிவிருத்தி திட்ட மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

கூட்டுறவு சட்டத்தை மறுசீரமைத்தல், கூட்டுறவு ஆணைக்குழுவுக்கு திறமையான அதிகாரிகளை நியமிப்பதன் அவசியம் குறித்தும் அத்தனகல்ல கூட்டுறவு சங்கத்தின் தலைவர் ஜனாதிபதி அவர்களுக்கு சுட்டிக்காட்டினார்.

அபேட்சகர் உப்புல் மகேந்திர அத்தனகல்ல வாரன ரஜமகா விகாரைக்கு அருகில் வாகனத் தரிப்பிடத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் அங்கு வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

இந்திய தொழிலாளர்களை அழைத்து வருவதை குறைத்து, பாரம்பரிய தங்கம், வெள்ளி கைத்தொழிலாளர்களுக்கு நகைகளை உற்பத்தி செய்வதற்கும் உற்பத்தி தொடர்பான தொழிநுட் அறிவு மற்றும் மூலப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தருமாறும் மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

மாணவர்கள் சிலர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க கிரிந்திவல தொடக்கம் பாதுகாப்பு சேவை கல்லூரிக்கு பாடசாலை பேருந்து ஒன்றை வழங்குவதாக அபேட்சகர் மிளான் ஜயதிலக்க கிரிந்திவல பொது பேருந்து தரிப்பிட வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.

மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையில் 15 வருடங்களாக சேவையற்றிய சிலர் தமது தொழிலை நிரந்தரப்படுத்தி தருமாறு விடுத்த வேண்டுகோளுக்கு ஜனாதிபதி அவர்கள் தனது அவதானத்தை செலுத்தினார்.

அபேட்சகர் வர்ணன் குணரத்தன தெகட்டனவில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளில் கலந்துகொண்ட ஜனாதிபதி அவர்கள், வருகை தந்திருந்த மக்களுடன் சுமூகமாக கலந்துரையாடினார்.

ஒரு இலட்சம் வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கையை நோக்கமாகக்கொண்டு விதைகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை நிறைவு செய்யும் வகையில் கடைசி விதைகள் அடங்கிய பொதியையும் “தொம்பே அபிமானய” நூலையும் வர்ணன் குணரத்ன ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இந்நிகழ்வுகளில் கலந்துகொண்டார்.

(English) Recent News

Most popular