Presidential Secretariat of Sri Lanka

கொவிட் 19 நிதியத்திற்கு ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி 500,000 அமெரிக்க டொலர்கள் அன்பளிப்பு….

ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி இட்டுகம கொவிட் 19 சுகாதார சமூகப் பாதுகாப்பு நிதியத்திற்கு 500,000 அமெரிக்க டொலர்களை (92.5 மில்லியன் ரூபா) நிதியை அன்பளிப்பு செய்துள்ளது.

ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கியின் தலைமை நிறைவேற்று அதிகாரி திரு.பிங்கு மால் தெவரதந்ரீ  அதற்கான காசோலையை நேற்று (28) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளித்தார்.

இலங்கையில் கொவிட் 19க்கு எதிரான நடவடிக்கைகளிற்கு தமது பங்களிப்பை வழங்கி இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மூலம் வங்கி அன்பளிப்பை மேற்கொண்டுள்ளது. ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி பிஎல்சி ஊடாக வழங்கப்பட்ட 300,000 அமெரிக்க டொலர்களும் இலங்கையில் உள்ள ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கி வழங்கிய 200,000 அமெரிக்க டொலர்களும் இதில் அடங்கும்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்கும் ஒழிப்பதற்கும் நோய் பரவுவதை தடுப்பதற்கும் முன்னேற்பாடுகள், வைரஸ் தொடர்பாக மக்களை விழிப்பூட்டுதல், நோயாளிகளை கண்டறிவதற்கான உபகரணங்களை கொள்வனவு செய்தல் போன்ற பணிகளுக்காக இந்த நிதி பயன்படுத்தப்படுமென வங்கி எதிர்பார்க்கின்றது.

சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் சஞ்சீவ முனசிங்க, இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி மகேஸ் குணசேகர, ஸ்டேன்டட் சார்ட்டட் வங்கியின் வர்த்தக சின்ன மற்றும் சந்தைப்படுத்தல் தலைவர் அனுக் த சில்வா ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular