Presidential Secretariat of Sri Lanka

“கிராமத்துடன் உரையாடலில்” முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு பலன்… பஹல கிரிபாவ குளத்தின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம் …

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் பணிப்புரையின் பேரில் பஹல கிரிபாவ குளத்தின் புனரமைப்பு பணிகள் இன்று (08) ஆரம்பமானது.

கடந்த சனிக்கிழமை (06) குருநாகல் மாவட்டத்தில் கிரிபாவ பிரதேச செயலகப் பிரிவின் வேரகல கிராம சேவகர் பிரிவில் நடைபெற்ற “கிராமத்துடன் உரையாடல்” நிகழ்ச்சியின் போது உ குளத்தை புனரமைத்து தருமாறு கிராம மக்கள் ஜனாதிபதி அவர்களிடம் கேட்டுக்கொண்டனர்.

அந்த கோரிக்கையை விரைவாக நிறைவேற்றுமாறு ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பணிப்புரையின் பேரில் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் குளத்தின் புனரமைப்பு பணிகளை ஆரம்பித்தது.

கிரிபாவ குளத்தின் பரப்பளவு 64 ஹெக்டேயார்களாகும். இது 250 குடும்பங்களுக்கு சொந்தமான பயிர் நிலங்களுக்கு நீர் வழங்குகிறது. இந்த குளம் நீண்ட காலமாக புனரமைக்கப்படாததால், விவசாயிகள் இரண்டு போகங்களுக்கு மட்டுமே பயிரிட முடியுமாக இருந்தது. குளத்தின் புனரமைப்பு பணிகளை விரைவில் நிறைவு செய்து மூன்று போகங்களிலும் பயிர்ச்செய்கையை மேற்கொள்வதற்கு நீரை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.

(English) Recent News

Most popular