Presidential Secretariat of Sri Lanka

“கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது புராணய, ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மாஹிமி’ ஆய்வு நூல் வெளியீடு ஜனாதிபதி தலைமையில் …

“கபிலவஸ்துபுர ஸ்ரீ சர்வஞ்ஞ தாது புராணய, ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மாஹிமி’ ஆய்வு நூல் வெளியீட்டு விழா இன்று (17) மாலை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச மகாநாயக்க தேரரின் வழிகாட்டுதலின் கீழ், திரு. டபிள்யூ.ஏ. பத்மின் சமீர இந்த நூலை தொகுத்துள்ளார்.

விழாவுக்கு வருகை தந்த ஜனாதிபதி அவர்கள் ராஜகுரு வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மகாநாயக்க தேரரின் புகைப்படத்திற்கு. மலரஞ்சலி செலுத்தினார்.

சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச மகாநாயக்க தேரர் ஜனாதிபதி அவர்களுக்கு நூலை வழங்கி வைத்தார். ஜனாதிபதி அவர்களுக்கு நினைவு பரிசொன்றும் வழங்கப்பட்டது.

வஸ்கடுவே ஸ்ரீ சுபூதி மகா விகாரையின் உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதி அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிகாயவின் பதில் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய கன்துனே அஸ்ஸஜீ தேரர், ஸ்ரீ லங்கா ராமான்ய மகா நிகாயவின் மகாநாயக்க தேரர் அக்கமஹா பண்டித சங்கைக்குரிய மகுலேவே விமல தேரர், அமரபுர ஸ்ரீ சம்புத்த  சாசனோதய மகா சங்க சபையின் மகா நாயக்க தேரர் சங்கைக்குரிய வஸ்கடுவே மஹிந்தவன்ச நாயக்க தேரர், கோட்டே ஸ்ரீ கல்யானி சாமஸ்ரீ தர்ம மகா சங்க சபையின் அனுநாயக்க தேரர் பேராசிரியர் சங்கைக்குரிய கொடபிட்டியே ராஹுல தேரர் உள்ளிட்ட மகா சங்கத்தினர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, இராஜாங்க அமைச்சர்களான விதுர விக்ரமநாயக்க, பியல் நிஷாந்த, ஜயன்த சமரவீர ஆகியோரும், முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே, மியன்மார் தூதுவர் ஹேன் தூ ஆகியோர் உள்ளிட்ட உள்நாட்டு வெளிநாட்டு பிரமுகர்கள், அமரபுர நிகாயாரக்ஷக நிர்வாக சபை  தலைவர் அஜித் டி சொய்ஸா உள்ளிட்ட நிர்வாக சபை உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

(English) Recent News

Most popular