Presidential Secretariat of Sri Lanka

சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க ‘சூர்ய ஸ்வர்ண’ விருது பெற்றார்…

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவரான சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்படும் ‘சூர்ய ஸ்வர்ண’ விருதைப் பெற்றார்.

விருது வழங்கும் விழா பன்னிப்பிட்டிய ருக்மலே ஸ்ரீ தர்மவிஜயாலோக மஹா விஹாரையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்றது.

ஜப்பானுடனான நட்புறவுகளை மேம்படுத்துவதற்கு வழங்கிய பங்களிப்புக்காக, ஜப்பான் அரசாங்கத்தினால் ‘சூர்ய ஸ்வர்ண’ (The Order of the Rising Sun) விருது, வருடத்துக்கு இரண்டு முறை ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வேகபிடிய மற்றும் ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதயாகியிடம் இருந்து விருதைக் கையேற்ற ஜனாதிபதி அவர்கள், அதனை சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்கவுக்கு வழங்கினார்.

விழாவில் பேராசிரியர் சுனில் ஆரியரத்ன சிறப்புரை ஆற்றினார்.

விருது வழங்கும் விழாவில் பங்கேற்பதை குறிக்கும் வகையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி சங்கைக்குரிய இத்தேபான தம்மாலங்கார தேரரினால், ஜப்பான் தூதுவர் மிசுகொஷி ஹிதயாகி அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

டபிள்யூ.கே.எச். வேகபிடிய மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் சுதந்த லியனகே ஆகியோர், ஜனாதிபதி அவர்களுக்கு நினைவுச் சின்னமொன்றை வழங்கினர்.

மஹா சங்கத்தினர், பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க, பல்கலைக்கழக வேந்தர்கள், உபவேந்தர்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்கள் உள்ளிட்ட பலர், இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular