Presidential Secretariat of Sri Lanka

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்

கியூபாவில் நடைபெற்ற “ஜி77 + சீனா” அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் கலந்து கொண்ட பின்னர், அமெரிக்காவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இலங்கை நேரப்படி இன்று (17) அதிகாலை நியூயோர்க் நகரைச் சென்றடைந்தார்.

“2030 நிகழ்ச்சி நிரலுக்கான அமைதி, சுபீட்சம், முன்னேற்றம் மற்றும் நிலைபேற்றுத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கான நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புதல் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை மீண்டும் உருவாக்குதல்” என்ற தொனிப்பொருளின் கீழ் செப்டம்பர் 18 முதல் 21 வரை இம்முறை கூட்டத்தொடர் நடைபெறும். ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, செப்டெம்பர் மாதம் 21ஆம் திகதி கூட்டத்தொடரில் பங்கேற்று, தனது விசேட உரையை ஆற்ற உள்ளார்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78 ஆவது கூட்டத்தொடருக்கு இணையாக செப்டம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ள, 2030 ஆம் ஆண்டிற்கான மாற்றம் மற்றும் விரைவான நடவடிக்கைகள் என்பவற்றுக்காக உலக தலைவர்களினால் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் 2023 நிலைபேறான அபிவிருத்தி இலக்குகள் உச்சி மாநாட்டின் அரச தலைவர்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்கவுள்ளார்.

மேலும், அன்று ஜனாதிபதி, உச்சி மாநாட்டில் பங்கேற்கும் பல அரச தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதுடன், கடல்சார் நாடுகளுக்கான ஆசிய-பசுபிக் தீவு நாடுகள் கலந்துரையாடலிலும் பங்கெற்கவுள்ளார்.

(English) Recent News

Most popular