Presidential Secretariat of Sri Lanka

தகவலுக்கான உரிமை

தகவல் உத்தியோகத்தர் விபரங்கள் பதவி குறிப்பிட்ட உத்தியோகத்தர்
விபரங்கள்
இலங்கையின் தகவல்
உரிமை ஆணைக்குழு
திரு.பீ.கே.எஸ்.ரவீந்திர
சனாதிபதியின் மேலதிகச் செயலாளர்
திரு உதய ரஞ்சித் செனெவிரத்ன
சனாதிபதியின் செயலாளர்
திரு மஹிந்த கம்மன்பில
தலைவர்
முகவரி: சனாதிபதி செயலகம்,
காலிவீதி,
கொழும்பு 01
முகவரி:சனாதிபதி செயலகம்,
காலிமுகம்,
கொழும்பு 01
தகவல் உரிமை ஆணையாளரின் அறை
இல.203-204 பண்டாரநாயக்க ஞாபகாரத்த
சர்வதேச மாநாட்டு மண்டபம்,
கொழும்பு 07
தொலைபேசி இல: 0112-4234495
0112-334354
EXT.3196
Email:rti@presidentsoffice.lk
Fax:0112-340340
தொலைபேசி இல: 0112-4354418
0112-333633
Email: prsec@presidentsoffice.lk
Fax:0112-472100
Telephone No. +94 11 2691625

 

இல. சிங்களம் தமிழ் ஆங்கிலம்
1 RTI சட்டம் RTI சட்டம் RTI சட்டம்
2 RTI பிரமாணங்கள் RTI பிரமாணங்கள் RTI பிரமாணங்கள்

 

மேற்குறிப்பிட்ட சட்டத்தின் கீழ் சனாதிபதி செயலகம் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்ப இல. RTI 1 ஐப் பயன்படுத்துவதன் மூலம் தகவல் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல் உத்தியோகத்தருக்கு தகவல் வேண்டி விண்ணப்பிக்கலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமில்லை.

தகவலுக்கான விண்ணப்பம் 

1. விண்ணப்ப இல. RTI 1 விண்ணப்பத்தைக் கடிதத்துடன் சமர்ப்பிக்கவும் அல்லது தேவையான தகவலைப் பெற்றுக் கொள்வதற்காக தகவல் உத்தியோகத்தரிடம் ஒரு வாய்மூல வேண்டுகோளை விடுத்து அதற்கான ஏற்புரையைப் பெற்றுக்கொள்ளவும்.

2. நீங்கள் வேண்டிக்கொள்ளும் தகவல் வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்து இயன்றளவு விரைவில் அல்லது 14 நாட்களுக்கு முன்னராக உங்களுக்கு அறிவிக்கப்படும்.

3. கோரப்படும் தகவலை வழங்கத் தீர்மானித்திருப்பின் ஆணைக்குழுவினால் முடிவுசெய்யப்படும் செலுத்தப்படவேண்டிய கட்டணங்கள் குறித்து உங்களுக்கு அறிவிக்கப்படும். குறித்துரைக்கப்பட்ட கட்டணங்கள் அவசியமாயின் அவை செலுத்தப்படும்போது நீங்கள் வேண்டிக்கொண்ட  தகவல் உங்களுக்கு வழங்கப்படும். அல்லது இலவசமாக வழங்கப்படும்.

4. குறித்துரைக்கப்பட்ட கட்டணங்களை செலுத்தியபின்னர்  கோரப்பட்ட தகவல்களை 14 நாட்களுக்குள் வழங்குவது  கடினமாயின், தகவல் உத்தியோகத்தர் காலநீடிப்புக்கான காரணங்களை உங்களுக்கு அறிவித்து, 21 தினங்கள் மேலதிக காலப்பகுதியினுள்   கோரப்பட்ட தகவலை வழங்கவேண்டும்.

5. கோரப்பட்ட தகவல் பிரசையின் உயிர் மற்றும் உடல் ரீதியான சுதந்திரம் சம்பந்தமானதாயின், அது வேண்டுகோள் பெற்றுக்கொள்ளப்பட்டு 48 மணித்தியாலங்களுள் வழங்கப்படுதல் வேண்டும்.

6. உங்கள் தகவலுக்கான கோரிக்கைக்கு நீங்கள் பெற்றுக்கொள்ளும் பின்வரும் வகையிலான பதில்கள் குறித்து நீங்கள் திருப்தியுறாதவிடத்து, அத்தகைய பதில் கிடைத்து 14 நாட்களுள் பின்வரும் உத்தியோகத்தர்களுக்கு ஒரு மேன் முறையீட்டை சமர்ப்பிக்கவும்.

1. தகவலுக்காகச் செய்யப்பட்டுள்ள வேண்டுகோளுக்கு மறுப்புத் தெரிவித்தல்.

2. பிரிவு 5 இன் கீழ் இத்தகைய தகவல் புறநடையாக்கப்பட்டுள்ளது என்னும் காரணத்தினால் தகவலை  வழங்குவதற்கு மறுப்புத் தெரிவித்தல் .

3. இந்தச் சட்டத்தில் குறித்துரைக்கப்பட்டுள்ள காலச்சட்டகங்களுடன் இணங்கியொழுகாமை

4. பூரணமற்ற , தவறாக வழிநடத்தக்கூடிய அல்லது பொய்யான தகவல்களை வழங்குதல்

5. அளவுக்கு மேற்பட்ட கட்டணங்களை வசூலித்தல்

6. தேவையான படிவத்தில் தகவல்களை வழங்குவதற்கு தகவல் உத்தியோகத்தர் மறுப்புத் தெரிவித்தல்

7. வேண்டிக்கொள்ளும் பிரசை தகவல் உருக்குலைப்புச் செய்யப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளது அல்லது அதைப் பெறவிடாமல் தடுக்கும் வகையில் தவறான இடத்தில வைக்கப்பட்டுள்ளது என நம்புவதற்கான நியாயமான காரணங்கள் இருத்தல்