Follow Us:

Friday, Nov 14
செப்டம்பர் 29, 2025

ஜனாதிபதிக்கும் ஜப்பான் நிதி அமைச்சருக்கும் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

ஜப்பான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் ஜப்பான் நிதி அமைச்சர் கதோ கசுனொபுவிற்கும் (KATO Katsunobu) இடையில் இன்று (29) பிற்பகல் டோக்கியோவில் உள்ள இம்பீரியல் ஹோட்டலில் இருதரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், முதலீடு மற்றும் பொருளாதார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் ஜப்பான் உதவி/JICA ஒத்துழைப்பின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் மற்றும் செயல்படுத்த எதிர்பார்க்கப்படும் புதிய திட்டங்கள் குறித்து கவனம் செலுத்தப்பட்டது.

 

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், டிஜிட்டல் பொருளாதாரம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஹான்ஸ் விஜயசூரிய, ஜனாதிபதியின் சிரேஷ்ட பொருளாதார ஆலோசகர் துமிந்த ஹுலங்கமுவ, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர், பேராசிரியர் பிவிதுரு ஜனக் குமாரசிங்க மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Top