Follow Us:

Friday, Dec 13
நவம்பர் 22, 2024

ஜனாதிபதி செயலாளருக்கும் ஜப்பான் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கும் ஜப்பானிய தூதுவர் அகியோ இசோமடாவுக்கும் (Akio Isomata) இடையிலான சந்திப்பொன்று இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு வாழ்த்துத் தெரிவித்த ஜப்பானிய உயர்ஸ்தானிகர், இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை திறம்பட தொடர்ந்தும் முன்னெடுக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

வீண் விரயம், ஊழல், மோசடியற்ற நாட்டை உருவாக்கி நாட்டை பொருளாதார ரீதியில் முன்னோக்கிக் கொண்டு செல்லும் புதிய கொள்கைக்கு ஜப்பான் அரசாங்கத்தின் பாராட்டுக்களை தெரிவித்த அகியோ இசோமடா, இலங்கையின் புதிய அரசாங்கத்திற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் சிறந்த ஆதரவை வழங்குவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Top