Follow Us:

Saturday, Jul 19
டிசம்பர் 2, 2024

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கும் கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வதற்கான குழுவின் அறிக்கை ஜனாதிபதிக்கு கையளிப்பு

பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட கொடுப்பனவுகள் மற்றும் விசேட சலுகைகளை மீள்பரிசீலனை செய்வது தொடர்பில் ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று (02) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

Top