Follow Us:

Tuesday, Jul 01
மே 10, 2025

வெசக் பக்திப் பாடல் நிகழ்ச்சி மே 12, 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும்

கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரை, ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து ஏற்பாடு செய்யும்,”புத்த ரஷ்மி” வெசாக் வலயத்துடன் இணைந்த வகையில் நடைபெறும் “வெசாக் பெதி கீ சரணிய” (வெசக் பக்திப் பாடல் நிகழ்ச்சி) மே 12, 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும்.

முப்படைகள், பொலிஸ், சிவில் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் பக்திப் பாடல் குழுக்கள் மற்றும் பிரபல பாடகர்களின் பங்கேற்புடன் இந்த பக்திப் பாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

“வெசாக் பெதி கீ சரணிய” மே 12, 13, 14 மற்றும் 15 ஆகிய திகதிகளில் மாலை 6.30 மணிக்கு ஆரம்பமாகி இரவு 8.30 மணி வரை நடைபெறும்.

Top