Follow Us:

Saturday, Nov 15
ஜூலை 23, 2025

அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி அனுநாயக்க தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி செலுத்தினார்

மறைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவ ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரரின் புனித பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் புனித பூதவுடல் வைக்கப்பட்டுள்ள அஸ்கிரி மகா விஹாரையின் அதி வணக்கத்திற்குரிய உடுகம ஸ்ரீ புத்தரக்கித மகா நாயக்க தேரரின் நினைவு மண்டபத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி, நேற்று (22) இரவு புனித பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியதோடு, அஸ்கிரி விகாரை தரப்பு மகா சங்கத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரிய தரப்பின் அதி வணக்கத்திற்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன மகா நாயக்கதேரரை சந்தித்து அவருடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

Top