Follow Us:

Friday, Nov 14
செப்டம்பர் 1, 2025

கச்சதீவிற்கு ஜனாதிபதி கண்காணிப்பு விஜயம்

யாழ்ப்பாணத்தில் பல அபிவிருத்தித் திட்டங்களைத் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் மற்றும் திறப்பு விழாக்கள் என்பவற்றில் இன்று (01) பங்கேற்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, யாழ்ப்பாணத்தில் உள்ள கச்சதீவிற்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டார்.

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் , பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால, வடக்கு கடற்படைக் கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகே ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.

Top