Follow Us:

Tuesday, Aug 12
ஆகஸ்ட் 12, 2025

ஜனாதிபதிக்கும் கனேடிய உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வொல்ஷிற்கும் (Eric Walsh) இடையிலான சந்திப்பு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது.

தனது பதவிக்காலம் நிறைவடைந்து இலங்கையை விட்டு வெளியேறும் எரிக் வொல்ஷின் எதிர்கால செயற்பாடுகளுக்கு ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்தார்.

கனடாவில் இலங்கை மக்கள் அதிகளவில் வசிப்பதை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கும், இந்நாட்டில் மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கச் செயல்முறைக்கும் கனடா வழங்கிய ஆதரவைப் பாராட்டியதுடன்,எதிர்காலத்திலும் அத்தகைய ஆதரவு வழங்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க மற்றும் ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Top