Follow Us:

Wednesday, May 21
மே 15, 2025

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் மூன்றாவது நாளாகவும் வெசாக் கொண்டாட்டங்கள்

கொழும்பு ஹுணுபிட்டிய கங்காராம விகாரை , ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் என்பன இணைந்து ஏற்பாடு செய்துள்ள புத்த ரஷ்மி வெசாக் வலயத்துடன் இணைந்ததாக நடைபெறும் “வெசாக் பக்திப் பாடல் இசைத்தல்”, நிகழ்வு மூன்றாவது நாளாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன ஆகியோரின் தலைமையில் ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நேற்று (14) மாலை 6.30 மணிக்கு ஆரம்பமானது.

வெசாக் பக்திப் பாடல் இசை நிகழ்வின் மூன்றாவது நாளில், இலங்கை பொலிஸ் இசைக்குழுவின் இசையுடன் பிரபல பாடகர்களான இலியாஸ் பேக், இமான் பெரேரா, புத்திக உஷான் மற்றும் இலங்கை பொலிஸ் பக்திப் பாடல் குழுவினர் பாடல் இசைத்தனர். அதே நேரத்தில், ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் வெசாக் கூடு கண்காட்சியும் நடைபெற்றது.

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நடைபெறும் இந்த பக்தி பாடல் நிகழ்ச்சி இன்று (15) நிறைவடைகிறது.

வெசாக் கொண்டாட்டங்களைப் பார்வையிட கொழும்புக்கு வரும் மக்களுக்காக ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் சிற்றுண்டி தன்சல் மற்றும் ஐஸ்கிரீம் தன்சல் என்பன எதிர்வரும் 16 ஆம் திகதி வரை நடைபெறும்.

இதேவேளை, கங்காராம “புத்த ரஷ்மி” வெசாக் வலயம் மற்றும் “பௌத்தாலோக” வெசாக் வலயம் ஆகியவற்றுடன் இணைந்து, ஜனாதிபதி அலுவலகத்தின் அனுசரணையுடன் பல வெசாக் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. ஜனாதிபதி செயலகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள கட்டிடங்கள் மற்றும் வீதிகள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளதோடு வெசாக் கூடு கண்காட்சி உட்பட பல நிகழ்ச்சிகள் ஜனாதிபதி அலுவலக உத்தியோகஸ்தர்களின் பங்கேற்புடன் நடைபெற்றன.

Top