Follow Us:

Tuesday, Jul 22
ஜனவரி 31, 2025

ஜனாதிபதி இன்று யாழ்ப்பாணத்தில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (31) யாழ்ப்பாணத்தில் பல நிகழ்வுகளில் பங்கேற்க உள்ளார்.

அதன்படி, யாழ்.மாவட்டத்தின் அபிவிருத்தி வேலைத்திட்டம் மற்றும் எதிர்கால திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடுவதற்கான யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று முற்பகல் 10:30க்கு யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெறவுள்ளது.

அதனையடுத்து இன்று (31) பிற்பகல் 1.30 மணிக்கு யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பிரதேசத்திலும், பிற்பகல் 3.30 மணிக்கு சாவகச்சேரி பிரதேசத்திலும் நடைபெறவிருக்கும் இரு சிநேகபூர்வ சந்திப்புகளிலிலும் ஜனாதிபதி இணைந்துகொள்ளவுள்ளார்.

Top