Follow Us:

Sunday, Aug 10
ஆகஸ்ட் 9, 2025

ஜனாதிபதி மல்வத்து, அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்தார்

கண்டி வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையில் நடைபெறும் வருடாந்த எசல பெரஹெராவின் நிறைவு நிகழ்வில் கலந்துகொள்ள கண்டிக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இன்று (09) பிற்பகல் மல்வத்து மற்றும் அஸ்கிரி தரப்பு மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிகளைப் பெற்றார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்த ஜனாதிபதி, மல்வத்து மாநாயக்க தேரர் வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல தேரரைச் சந்தித்து ஆசிர்வாதங்களைப் பெற்றதுடன், சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

பின்னர் அஸ்கிரி மகா விஹாரைக்குச் சென்ற ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, அஸ்கிரி தரப்பின் மகாநாயக்க வண, வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து நலம் விசாரித்ததுடன், சிறு உரையாடலிலும் ஈடுபட்டார்,

Top