Follow Us:

Wednesday, Apr 30
ஏப்ரல் 29, 2025

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பிவைப்பு

அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட “படலந்த வீடமைப்புத் திட்டத்தில் சட்டவிரோதமான தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாங்களை நிறுவுதல் மற்றும் நடத்திச் செல்லல் குறித்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை” ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் படி ஜனாதிபதி அலுவலகத்தினால் சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

25 ஆண்டுகளுக்குப் பிறகு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இந்த அறிக்கை தொடர்பில் அடுத்த கட்ட முன்னெடுப்புகளை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளதுடன், அதன்படி, குறித்த அறிக்கை இன்று (29) சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

Top