16 ஆவது தேசிய படைவீரர்கள் தினத்தை முன்னிட்டு, ஆயுதப்படைகளின் தளபதியான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அங்கீகாரத்துடன், முப்படைகளின் 217 அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவிகள் 12,217 க்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, இலங்கை இராணுவத்தின் 186 அதிகாரிகள் மற்றும் 10 093 இதர பதவிகள், இலங்கை கடற்படையின் 22 அதிகாரிகள் மற்றும் 1256 இதர பதவிகள், இலங்கை விமானப்படையின் 09 அதிகாரிகள் மற்றும் 868 ஏனைய பதவிகளுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.