Follow Us:

Thursday, Aug 07
ஏப்ரல் 5, 2025

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு “ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண” விருதை ஜனாதிபதி வழங்கினார்.

இலங்கை மக்களுடனான நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டும் வகையில் இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கு “ஸ்ரீ லங்கா மித்ர விபூஷண” விருதை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வழங்கினார்.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கும் இடையில் இன்று (05) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ சந்திப்பைத் தொடர்ந்து, ஜனாதிபதி இந்த விருதை இந்தியப் பிரதமருக்கு வழங்கினார்.

இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் “நூற்றாண்டு நட்புறவின் வளமான எதிர்காலத்திற்கான உறுதிப்பாடு” (Friendship Of Centuries Commitment to Prosperous Future) என்ற எண்ணக்கருவை உறுதிப்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

Top