இன்று (19) முற்பகல் பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருண ஜயசேகர ராகம “ரணவிரு செவன” நல விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படையினரின் நலன் குறித்து விசாரித்தார்.
தங்கியிருந்து சிகிச்சை பெற்று வரும் படையினரைச் சந்தித்து அவர்களின் தகவல்களைக் கேட்டறிந்த பிரதி அமைச்சர், அவர்களுடன் சுமூகமான உரையாடலிலும் ஈடுபட்டார்.
இதேவேளை, பிரதியமைச்சர் அருண ஜயசேகர, “ரணவிரு செவன” நல விடுதியில் கடமையாற்றும் வைத்தியர்கள் தலைமையிலான உத்தியோகஸ்தர்களுடன் உரையாடலில் ஈடுபட்டதுடன், படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் சேவை வசதிகள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் காஞ்சன பானகொட, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் வி.பி. எதிரிசிங்க மற்றும் “ரணவிரு செவன” நல விடுதியின் இராணுவ நிர்வாகி பிரிகேடியர் டபிள்யூ.டீ.எம். குமாரசிங்க உட்பட முப்படைகளின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.