மாவனெல்ல மயூரபாத கல்லூரி மாணவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தால் கல்வி சுற்றுலாவுடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட Vision நிகழ்ச்சியில் பங்கேற்க இன்று (01) வாய்ப்பு கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு இணைந்து செயல்படுத்தும் இந்த திட்டம், பாடசாலை மாணவர்களுக்கு ஜனாதிபதி அலுவலகம், ஜனாதிபதி மாளிகை, கொழும்பு துறைமுக நகரம் மற்றும் பாராளுமன்றத்தை தங்கள் கல்விச் செயற்பாடுகளுடன் தொடர்புபட்டதாக பார்வையிட வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் ஹரிணி அமரசூரிய மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊடகங்களின் பொறுப்புகள், ஊடகத் துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து விளக்கினார்.
மேலும், இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, “ Clean Sri Lanka”திட்டம் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்துடன் இணைந்ததாக, பிரதமர் ஹரிணி அமரசூரிய சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் ஒரு நினைவுப் பரிசாக பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக்கன்றுகளை வழங்கினார்.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிகச் செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க மற்றும் முப்படை ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவி பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, மாவனல்லை மயூரபாத கல்லூரியின் அதிபர் ஈ.ஜி.பி.ஐ. தர்மதிலக்க மற்றும் ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.