நிகவெவ தேவானம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரி, மற்றும் திருகோணமலை ரேவத்த சிறுவர் இல்ல பிள்ளைகளுக்கு இன்று (14) ஜனாதிபதி அலுவலகம் ஏற்பாடு செய்திருந்த ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
“Clean Sri Lanka” திட்டம் மற்றும் அதன் எண்ணக்கரு ரீதியான முக்கியத்துவம் குறித்து மாணவர்களுக்கு தெளிவூட்டப்பட்டது.
வாழ்க்கை என்பது ஒரு புத்தகம் என்றும், அந்தப் புத்தகத்தில் இனிமையான மற்றும் சோகமான அத்தியாயங்கள் இரண்டும் உள்ளன என்றும், ஒவ்வொருவரதும் வாழ்க்கையை எழுதுபவர் அவரே என்பதால், ஒவ்வொருவருக்கும் தம்மால் தான் அதை வெற்றிகரமாக நிறைவு செய்ய முடியும் என்றும் ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் கே.எம்.என். குமாரசிங்க சுட்டிக்காட்டினார்.
எனவே, இரக்க சுபாவத்துடன் தமது வாழ்க்கைப் புத்தகத்தை வெற்றிகரமான முடிவுக்கு இட்டுச் சென்று நாட்டின் முக்கியமான குடிமக்களாக மாறுமாறும் அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியுடன் இணைந்து, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை குறிக்கும் வகையில் பெறுமதியான மரக்கன்று பரிசாக வழங்கப்பட்டதுடன் ‘Vision’ சஞ்சிகையும் வழங்கப்பட்டது.
ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படை ஒருங்கிணைப்பு பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, நிகவெவ தேவாநம்பியதிஸ்ஸ மத்திய கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் இந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்.