திருகோணமலை ரதனஜோதி வித்தியாயத்தன பிரிவெனாவின் தேரர்கள், நாகியாதெனிய ஸ்ரீ குணானந்த கனிஷ்ட வித்தியாலயம் மற்றும் நிட்டம்புவ றோமன் கத்தோலிக்க கனிஷ்ட வித்தியாலய மாணவர்களுக்கு நேற்று (22) ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்படும் ‘Vision’ நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்புக் கிடைத்தது.
ஜனாதிபதி அலுவலகம், கல்வி அமைச்சு மற்றும் பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு ஆகியவை இணைந்து பாடசாலை மாணவர்களுக்காக இந்த திட்டத்தை செயல்படுத்துகின்றன.
ஜனாதிபதி ஆலோசகர் (சட்டம்) சட்டத்தரணி ஜே. எம். விஜேபண்டார, சட்டத்தின் ஆட்சி, மனப்பாங்கு வளர்ச்சி மற்றும் பாடசாலைக் கல்வியின் மூலம் பெறக்கூடிய வெற்றிகள் குறித்து இங்கு மாணவர்களுக்கு உரை நிகழ்த்தினார்.
இந்த நிகழ்ச்சித் திட்டத்துடன் இணைந்து, சுற்றாடலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டும் வகையில் அடையாள ரீதியிலான பரிசாக குறித்த பாடசாலைகளுக்கு பெறுமதியான மரக் கன்றுகளும் வழங்கப்பட்டன.
ஜனாதிபதி அலுவலகத்தின் முப்படைகளின் ஒருங்கிணைப்புப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் மேஜர் நதீக தங்கொல்ல, குறித்த பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.