சனாதிபதியின் செயலாளரால் வெளியிடப்பட்ட 2025 பெப்புருவரி 18 ஆம் திகதிய, PS/SB/Circular/2/2025 ஆம் இலக்கச் சனாதிபதி செயலகத்தின் உள் விவகார அலகு (உ.வி.அ) முறையாக நிறுவப்பட்டுள்ளது.
புகார்களை சமர்ப்பித்தல்
சனாதிபதி செயலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் அல்லது சனாதிபதி செயலகத்தால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பான புகார்களும் சேவை வழங்கலை மேம்படுத்துவதற்கான பரிந்துரைகளும் பின்வரும் வழிகள் மூலம் உள் விவகார அலகுக்குச் சமர்ப்பிக்கப்படலாம்:-
மின்னஞ்சல்:: iau@presidentsoffice.lk
வட்ஸ்அப்(Whatsapp): 071 640 2654
தொலைபேசி: 011 235 4495
அஞ்சல் முகவரி: உள் விவகார அலகு, சனாதிபதி செயலகம், கொழும்பு 01
உள் விவகார அலகின் ஆக்கஅமைவு
உள் விவகார அலகின் பதவிநிலை | பெயர் | பதவி |
அலகின் தலைவர் | திருமதி. சானகி எச். ரணதுங்க | சனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், செயலாளர் பணியகம் |
நேர்மைத்திறன் வாய்ந்த உத்தியோகத்தர்/ உறுப்பினர் | திரு. எஸ். ஹேனதீர
| சனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (சட்டம்) சட்ட விவகாரங்கள் பிரிவு |
உறுப்பினர் | திரு. டபிள்யூ. ஆர். பரணகம | பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு |
உறுப்பினர் | திரு. எச்.சி.என். தர்மபால | சனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர், நிர்வாகம் மற்றும் வெளிநாட்டு இராசதந்திரப் பிரிவு |
உறுப்பினர் | திருமதி. எல்.டபிள்யூ.சித்தாரி சாணிகா நவரத்ன | சனாதிபதியின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (ஊடகம்), சனாதிபதியின் ஊடகப் பிரிவு |
உறுப்பினர் | திரு. எஸ். எம். ஏ. பி. சோமரத்ன | பணிப்பாளர், வருவாய் நிர்வாக சீர்திருத்தம் மற்றும் நவீனமயமாக்கல் அலகு |
உறுப்பினர் | திருமதி. எம்.கே.ஜி. மொரவக | பணிப்பாளர் (தொடர்பாடல் மற்றும் நிர்வாகம்), க்ளீன் ஸ்ரீலங்கா செயலகம் |
உறுப்பினர் | திரு. எம்.எம்.நிமல் பிரேமதிலக | பணிப்பாளர், மக்கள் தொடர்புப் பிரிவு |
உறுப்பினர் | திரு. ஈ.ஆர்.எம்.இந்துனில் குணதிலக்க | பணிப்பாளர் (முதலீடு), ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய முன்னெடுப்பு அலகு |
உறுப்பினர் | திருமதி. என்.டபிள்யூ.எஸ். எச்.வன்னியாராச்சி | கணக்காளர், நிதிப் பிரிவு |
உறுப்பினர் | திருமதி. நதுனி ரி. வணிகசிங்க | சனாதிபதியின் உதவிச் செயலாளர், அரசியலமைப்பு மற்றும் நியதிச்சட்ட விவகாரங்கள் பிரிவு |
உறுப்பினர் | திரு.ஏ.எஸ்.டபிள்யூ.மதநாயக்க | உதவிப் பணிப்பாளர், நிதி மற்றும் பொருளாதார விவகாரங்கள் பிரிவு
|
உறுப்பினர் | திரு. ஜே.பி.சி. உடகும்புர | உதவிப் பணிப்பாளர், (திட்டமிடல்), உணவு பாதுகாப்பு மற்றும் கொள்கை பிரிவு |
உள் விவகார அலகின் முக்கிய நோக்கங்கள்
ஒவ்வொரு நிறுவனத்திலும் உள்ள உள் விவகாரஅலகுகள் பின்வரும் நோக்கங்களை அடைய வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது:-
- நிறுவனத்தின் ஊழலைத் தடுத்தலும் ஒருமைப்பாட்டு கலாச்சாரத்தை வளர்த்தலும்.
- நிறுவனத்தின் அனைத்து நடவடிக்கைகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்தல் மற்றும் நிறுவன நடைமுறைகள் மற்றும் முடிவுகள் தொடர்பான தகவல்கள் பொது மக்களுக்கு கிடைக்கப்படுவதை உறுதி செய்தல்.
- நிறுவனத்திற்குள் நெறிமுறை ஆளுகையை மேம்படுத்துதல்.
- தவறான நடத்தைகளைப் புகாரளிப்பதற்கும், இடித்துரைப்பவர்களைப் பாதுகாப்பதற்கும் மற்றும் இரகசியத்தன்மையைப் பேணுவதற்கும் பாதுகாப்பான மற்றும் அணுகக்கூடிய முறைமையை உருவாக்குதல்.
- சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முகவர் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு (இ.அ.ஊ.சா.பு.ஆ) ஆகியவற்றுடன் இணைந்து சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவளித்தல்.
உள் விவகார அலகின் பொறுப்புகள் மற்றும் பணிகள்
நிறுவன ஒருமைப்பாட்டின் முக்கிய அம்சங்களை இலக்காகக்கொண்ட செயலூக்கமான, தெளிவான மற்றும் கவனம் செலுத்தப்பட்ட ஊழல் எதிர்ப்பு முயற்சிகளை உறுதிசெய்வதற்கான பின்வரும் பொறுப்புகள் மற்றும் பணிகள் உள் விவகார அலகிற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது:-
- நிறுவனத்திற்குள் உள்ள அமைப்புரீதியான இடையூறுகளைக் (systemic bottlenecks) கண்டறிவதற்காக தற்போதைய நடைமுறைகள் மற்றும் சுற்றறிக்கைகளை ஆய்வு செய்து செயல்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்கேற்றவாறு அவற்றை எளிதாக்கல்.
- ஊழல் அபாய மதிப்பீடுகளை (Corruption Risk Assessment)) நடத்துவதன் மூலம் நிறுவனத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தையால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளைக் கண்டறிந்து இலக்கு வைக்கப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தல்.
- நிறுவனத்தின் தேவைகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட ஊழல் எதிர்ப்பு நோக்கங்கள் மற்றும் மூலோபாயங்களை உள்ளடக்கிய நிறுவனத்தின் ஒருமைப்பாட்டு செயல் திட்டத்தை உருவாக்கி செயற்படுத்தல்.
- தேசிய ஊழல் எதிர்ப்பு செயல் திட்டத்துடன் நிறுவனக் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை சீரமைப்பதன் மூலம் தேசிய ஊழல் எதிர்ப்பு இலக்குகளுடன் முழுமையாக இணங்குவதை உறுதி செய்தல்.
- 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் உட்பட தேசிய மற்றும் சர்வதேச ஊழல் எதிர்ப்புச் சட்டங்களுடன் நிறுவனம் இணங்குவதை மதிப்பிடுவதற்காக வழக்கமான இணக்க மதிப்பாய்வுகளை நடத்துதல் மற்றும் முன்னேற்றம் செய்யவேண்டிய பகுதிகளைக் கண்டறிதல்.
- அனைத்து அரச அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சொத்து வெளிப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு இணங்குவதை உறுதிசெய்தல் மற்றும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் விதிமுறைகள் மற்றும் 2023 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றிற்கேற்ப நலன் முரண்பாடுகளை நிர்வகித்தல்.
- நிறுவனத்தில் ஊழல் மற்றும் ஒழுக்கக்கேடான நடத்தை தொடர்பான புகார்களைப் பெற்றுக்கொள்ளவும் நிர்வகிக்கவும் பாதுகாப்பான முறைமையை அமைத்தல்; அத்தகைய புகார்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட அலுவலர்களால் அல்லது அலகுகளால் உடனடியாக கவனிக்கப்படுவதை உறுதி செய்தல்; வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழக்கமான பின்னூட்டல்களை வழங்குதல். தேவைப்பட்டால், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு தொடர்புடைய உண்மைகள், கண்டுபிடிப்புகள் அல்லது தகவல்களை இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவிற்கு அனுப்புதல்.
- நிறுவனத்தால் வழங்கப்படும் சேவைகளை விபரித்துக் காட்டும் குடிமக்கள் சாசனத்தை உருவாக்கி வெளியிடல்.
- அரச அலுவலர்களால் கடைப்பிடிக்கப்பட வேண்டிய தரப்படுத்தப்பட்ட நடத்தை விதிக் கோவை உட்பட நெறிமுறையான நிர்வாகத்தை ஊக்குவிக்கும் கொள்கைகளை உருவாக்கி செயல்படுத்தல்.
- ஊழல் எதிர்ப்பு கொள்கைகள் தொடர்பில் ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக பயிற்சியளித்தல் மற்றும் விழிப்புணர்வை உருவாக்கல் உள்ளிட்ட ஏனைய நடவடிக்கைகளை செயல்படுத்துதல்.
- இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு மற்றும் தேசிய ஊழல் எதிர்ப்பு கட்டமைப்பின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்படும் நேர்மை மதிப்பீட்டு செயல்முறைகளில் நிறுவனம் பங்கேற்பதையும் அதனுடன் ஒருங்கிணைந்து செயற்படுவதையும் உறுதி செய்வதுடன் தேசிய ஊழல் எதிர்ப்பு நேர்மை மதிப்பீட்டிற்கான நிறுவன மையப் புள்ளியாகச் செயல்படல்.
- அலகின் கடமைகளை நிறைவேற்றுவதில் தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்காக இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவுடன் தொடர்பைப் பேணுதல்.
- உள் விவகார அலகின் செயல்பாடுகள், ஊழல் எதிர்ப்பு முன்முயற்சிகளில் முன்னேற்றம், எதிர்கொள்ளும் சவால்கள் மேலும் எதிர்கால நடவடிக்கைகளுக்கான பரிந்துரைகளை உள்ளடக்கிய சுருக்கமான காலமுறை மற்றும் வருடாந்திர அறிக்கைகளை தயாரித்தல்.
- ஒருமைப்பாட்டு அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களைத் திட்டமிட்டு செயல்படுத்த தனியார் துறை பங்குதாரர்களுடன் இணைந்து பணியாற்றுதல்.