கொத்மலை,கெரண்டி எல்ல பிரதேசத்தில் நடந்த பஸ் விபத்தில் பெருமளவானவர்கள் சிகிச்சைக்காக கொத்மலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், வைத்தியசாலையின் தூய்மையாக்கல் பணிகளுக்காக “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டம் வலுவாக கைகோர்த்துக்கொண்டுள்ளது.
அதன்படி,வைத்தியசாலை வாட்டு தொகுதி மற்றும் வைத்தியசாலை சூழலை தூய்மைப்படுத்தி,நோயாளிகள் சிகிச்சை பெற தகுந்த சூழலை ஏற்படுத்திக்கொடுக்க “கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டம் துரிதமாக செயற்படுகிறது.
பிரதேச மக்கள் சுயமாக இதில் பங்கெடுத்துள்ளமை சிறப்பம்சமாகும். இந்த எதிர்பாராத விபத்தில் காயங்களுக்கு உள்ளாகி அவசர சிகிச்சைகளுக்காக குறைந்த வசதிகளுடன் கொத்மலை பிரதேச வைத்தியர்கள் உள்ளிட்ட வைத்திய பணிக்குழு மேற்கொண்ட அர்ப்பணிப்பிற்கு “கிளீன் ஸ்ரீலங்கா” செயலகம் பாராட்டியது.