Presidential Secretariat of Sri Lanka

PCR பரிசோதனைக்காக கொவிட் – 19 சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தினால் 36 மில்லியன்….

சுகாதார, சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு மேற்கொள்ளும் அத்தியாவசிய PCR பரிசோதனைகளுக்காக சுகாதார, சமூக, பாதுகாப்பு நிதியத்தின் மூலம் 35,605,812.00 ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலை இன்று (24) மத்திய வங்கி ஆளுநர், கொவிட் – 19 சுகாதார சமூக பாதுகாப்பு நிதியத்தின் முகாமைத்துவ சபை தலைவர் பேராசிரியர் டப்ளியு.டி.லக்ஷ்மன் அவர்களினால் சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்ஜீவ முனசிங்கவிடம் கையளிக்கப்பட்டது.

PCR பரிசோதனை, சுகாதார, பாதுகாப்பு, ஆலோசனை நிகழ்ச்சித்திட்டங்களுக்கு செலவிடுவதற்காக இந்நிதி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார, சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சின் கோரிக்கையின் பேரில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம் மேற்கொள்ளும் PCR பரிசோதனைகளுக்கு தேவையான பரிசோதனைக் கருவிகளை கொள்வனவு செய்வதற்கு 34,105,812.00 ரூபா செலவிடப்பட்டுள்ளது. யாழ் பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் PCR பரிசோதனைகளின் அளவை அதிகரிப்பதற்காக அவசர, அத்தியாவசிய பரிசோதனை கருவிகளை கொள்வனவு செய்வதற்கு 2.5 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

கொவிட்- 19 நிதியம் தற்போது 1525 மில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.

இந்நிதியத்தின் முக்கிய நோக்கமான கொவிட் -19 ஒழிப்புக்குத் தேவையான மருந்துகள், மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட வசதிகளை வழங்குவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திற்கு இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

(English) Recent News

Most popular