Presidential Secretariat of Sri Lanka

கட்டிடத்தின் வரலாறு

parliment_office

இலங்கை சனநாயக சோஷலிஸக் குடியரசின் சனாதிபதி அரசின் தலைவரும் , நிறைவேற்றுத்துறையினதும், அரசாங்கத்தினதும் தலைவரும் மற்றும் ஆயுதப் படைகளின் பிரதம கட்டளைத் தளபதியும் ஆவார். “சனாதிபதி செயலகம்” என அழைக்கப்படும் சனாதிபதியின் அலுவலகம் இலங்கை அரசியலமைப்பினால் சனாதிபதிக்கு கையளிக்கப்பட்டுள்ள கடமைகள், பொறுப்புகள் மற்றும் அதிகாரங்களை பிரயோகிப்பதற்கான நிருவாக மற்றும் நிறுவன சட்டகத்தை வழங்குகின்றது.

.தற்போதைய சனாதிபதி செயலகம் காலி முகத்தில், பழைய பாராளுமன்றக் கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ளது. எமது நாட்டின் அரசியல் முன்னேற்றத்தில் அதிமுக்கியத்துவம்வாய்ந்த நிறுவன திருப்புமுனை ஆகிய இந்த மகோன்னத சீரிய கட்டமைப்பு 82 வருடங்களுக்கு முன்னர் ஐந்து கட்டிடக் கலை துறைகளுள் ஒன்றாகிய ”லோனிக்” பாணியில் கட்டப்பட்டதாகும். தோற்றத்தில் பாராளுமன்றக் கட்டிடம் ஏதன்ஸ் நகரில் உள்ள அக்குறோ போலிஸ் மலையில் உள்ள கிரேக்க பெண் தெய்வம் ஆதீன் பிரதான கோயிலை ஒத்ததாகும்.

இந்தக் கட்டிடம் 1930 சனவரி 29 ஆம் திகதி சட்டமன்றமாக ஆளுநர் சேர் ஹேபேர்ட் ஸ்ரான்லி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.

இங்கு இடம் பெறும் தீர்க்க ஆலோசனைகள் பல்வேறுபட்ட பாரம்பரியங்களை ஒடுக்குவதாகவன்றி பரஸ்பர மதிப்பு என்னும் அடிப்படையில் அவற்றின் கூட்டிணைப்பின் மூலம்  சனத்தொகையின் பல சனசமூகங்களையும் வர்க்கங்களையும் தேசிய வாழ்க்கையினதும் தேசிய முன்னனேற்றத்தினதும் உயிரியக்கவியலான  ஐக்கியத்தைக் குறிக்கும் வகையில் ஒன்றிணைப்பதற்கு உதவுதல் வேண்டும்.  (சட்டமன்ற விவாதங்கள் (1930 பாகம்  1) ) அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மற்றும் அதன் விளைவான மாற்றங்களுடன் சட்டவாக்க சபையின்  பெயர் மாற்றமடைந்து இக்கட்டிடம் சட்டமன்றம் என்றும் (1931 -1947) ; மக்கள் பிரதிநிதிகள் சபை (1947-1972) ; தேசிய அரசுப் பேரவை (1972-1978) மற்றும் இலங்கை பாராளுமன்றம் (178-1982) என மாற்றமுற்றது. பாராளுமன்றம்  கோட்டே ஶ்ரீ ஜயவர்த்தனபுரவுக்கு நகர்த்தப்பட்ட பின்னர் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடம் மீளவும் 1983 செத்தெம்பர் 08 ஆம் திகதி சனாதிபதி செயலகம் எனப் பெயரிடப்பட்டது.

இக்கட்டிடத்தின் நிர்மாணத்திற்கான கருத்திட்டம் 1912 இல் இலங்கையின் ஆளுனராக விளங்கிய  அதிமேதகு சேர் ஹென்றி மக்கலம் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. தெரிவுபெற்ற நிர்மாணத்திற்கான இடம் காலி முகத்தின் வடக்கு முனையில் உள்ள போர்வீரர் பாடிக்கும் “பேர ஏரிக்கும்”  இடைப்பட்ட பகுதியாகும்.  மண்ணின் தன்மை காரணமாக அத்திவாரம் சம்பந்தமாக விசேட முன்பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு முழுக்கட்டமைப்புமே வலுவூட்டப்பட்ட கொங்கிறீற் தூண்களில் எழுப்பப்பட்டுள்ளது. மேற்கை நோக்கிய இச்சபையின் கட்டிடம் காலி முக வீதியில் மனப்பதிவு ஏற்படுத்தக்கூடிய முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. கட்டிடம் ஒரு திறந்த நோக்கை ஏற்படுத்தும் வகையிலும் நிலைமாறும் மென்காற்றுகளின் அனுகூலத்தைப் பெற்றுக் கொள்ளும் வகையிலும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது. மன்றத்தின் பேரவை கட்டிடத்தின் இடது பக்கத்தில் கடலின் ஓசை  பாதிக்காதவகையிலும் பிற்பகல் வெய்யில் மற்றும் தென்மேற்கு மென் காற்றுகள் என்பவை பாதிக்காத  வகையிலும் அமையப்பெற்றுள்ளது.

வெளியகப் பகுதிகளில் பயன்படுத்தப்பட்டுள்ள பொருட்கள் நிலத் தளப்பகுதியில் ரூவான்வெல்லையில் விசேடமாகஎ் கையகப்படுத்தப்பட்ட  கல் குவாரியிலிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட  கற்கள்; இதற்கு மேல் ஒரு சாந்துப் பூச்சு, அதன் வர்ணம் நிலத்தளப்பகுதியில் உள்ள முகப்புக் கற்களின் வர்ணத்தோடு விசேடமாக இணையக்கூடிய வகையில் தெரிவுபெற்றது. சகல இடங்களிலும் கட்டமைப்பு தீயினால் பாதிப்புறாததும் சுவர்கள் உருக்குச் சட்டகங்களால் வலுப்படுத்தப்பட்டு, கொங்கிறீற் தளங்களும், கொங்கிறீற் தூபிகளும்  நிறைந்தவையாகக் காணப்படுகின்றது. முழுக் கட்டிடமும் கொங்கிறீற் பதிகாலில் எழுந்து நிற்கின்றது. கட்டிடத்தினுள் இரைச்சலை அதிகுறைவாக்கும் வகையில் தளங்களில்  தக்கை நிலத்தள விதிப்பு மற்றும் றினோலியம் என்பவை பரந்த அளவில்  பயன்படுத்தப்பட்டுள்ளன.  நடைபாதைகளும் புகுமுக மண்டபமும் வர்ணக் கலவைகளிலான இறப்பர் விரிப்புகளால் மூடப்பட்டுள்ளன. சபா மண்டபத்துக்கு எதிரொலிகள் மற்றும் ஒலி அதிர்வுகளைக் குறைக்கும் வகையில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. ஓசைப் புலன் பண்புகள் இயன்ற அளவுக்கு பூரணமாக்கப்பட்டுள்ளன. சுவர்களும் உட்கூரையும் கரும்புச் சக்கை நார்களிலிருந்து உருவாக்கப்படும் ஒலி உறிஞ்சு தன்மைகொண்ட செலோரெக்ஸினால் மூடப்பட்டுள்ளன.

oldbuilding

சகல கதவுகள் மற்றும் யன்னல்களுக்கான பொருத்துக்களும், மின்சாரப் பொருத்துக்களும் வெண்கலத்தினால் ஆக்கப்பட்டவையாகும்.  சபா மண்டபம் அதன் கீழ்ப் பாகத்தில் கருமை நிறம் பூசப்பட்டதும் மெழுகினால் மெருகூட்டப்பட்டதுமான தேக்குமர மேற்பரப்பு முகப்பு கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது. சபா மண்டபத்தின் மேற்பாகம் முழுக்க முழுக்க செதுக்கு வேலைப்பாடுகளைக் கொண்ட முதிரை மரத்தினால் பொருத்து வேலைகள் செய்யப்பட்டதாகும். சபா மண்டபத்திற்கு காற்றோட்டம்  மற்றும் கட்டிடத்தின் அடிப்பாகத்தில் உள்ள சக்தி வாய்ந்த விசிறிகளிலிருந்து பாரிய ஊடு வழிகள் மூலம் கட்டிடத்தினுள் சுத்தமான காற்று உந்திச் செலுத்தப்படுகின்றது. அங்கத்தவர்களின் ஆசனங்களுக்குக் கீழே காணப்படும் மேல் உயர்த்திய படிகளில் உள்ள சீராக்கம் செய்யப்படக்கூடிய இரும்புத் தட்டங்களின் ஊடாக காற்று உள்நுழைகின்றது. நுழைமாடங்களுக்கான காற்றும் ஆசனங்களின் பின்புறமாகவுள்ள துவாரங்களின் ஊடாக உள்நுழைகின்றது. பகிரங்க உரைகளின்  தெளிவு மற்றும் செவிமடுக்கக்கூடிய தன்மை என்பவற்றைப் பாதிக்கும் தலைக்கு மேல் சுழலும் விசிறிகளுக்கான தேவையும் இதன்மூலம் தவிர்க்கப்பட்டுள்ளது. கட்டிடம் முழுவதும் காணப்படும் மின் ஒளியூட்டல் நேரற்றதாகவும்  தனியாகப்பிரித்து அமைக்கப்பட்டதாகவும் உள்ளது. அநேகமான சந்தர்ப்பங்களில் மின்சாரப் பொருத்துக்கள் பூரணமாகவே கண்ணுக்குத் தெரிபடாத நிலையில் உள்ளன. சபாமண்டபத்தில் அங்கத்தவர்களுக்கு மேசை விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அதேவேளையில் சபாமண்டபத்தின் மேற்பாகம் உயர்ந்த நிலையில் காணப்படும் யன்னல்களுக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ள பேரொளிப் பெருக்கிலிருந்து வரும் பிரதிபலிப்பினூடாக ஔியூட்டப்பட்டுள்ளது.

உள்நிலையில் கட்டிடம் அதிபகட்டாகவும் பல்வேறு மண்டபங்களில் பல்வேறு வண்ணக் கலவைகளுடன் அற்புதமான ஓசைப்பண்புகளுடனும் விளங்குகின்றது. சகல விடயங்களும் நன்கு கவனம் செலுத்தப்பட்டுள்ள தன்மை பொது வேலைகள் திணைக்களம் மற்றும் அதன் பிரதம கட்டிடக் கலைஞர் திரு.வூட்சன் என்போரின் அதிஉயர்வான திறன்களை வெ ளிப்படுத்துகின்றன. காற்றோட்டம் மற்றும் ஔியூட்டல் அதிசிறப்பான நிலையில் செயற்படும் முறைமையில் இக்கட்டிடத்தில் பணிபுரியும் அனைவரினதும் அதியுயர்வான வசதியை உறுதிப்படுத்தும் வகையில் சகல பிரயத்தனங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.