Presidential Secretariat of Sri Lanka

கனடா உயர் ஸ்தானிகர் மற்றும் சீன ஜனாதிபதியின் விசேட தூதுவர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுடன் சந்திப்பு

இலங்கைக்கான கனடா நாட்டின் உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கினோன் (Daved Mckinnon) இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் மேன்மைதங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

இதன்போது ஜனாதிபதி அவர்கள் உயர் ஸ்தானிகருடன் சுமூகமாக கலந்துரையாடியதுடன், உயர் ஸ்தானிகர் கனடா அரசாங்கத்தின் சார்பில் தனது வாழ்த்துக்களை ஜனாதிபதி அவர்களுக்குத் தெரிவித்தார்.

இதேநேரம், சீன மக்கள் குடியரசின் அரச பேரவையின் விசேட பிரதிநிதியும் சீன வெளிவிவகார அமைச்சின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் நாயகமுமான இலங்கைக்கான முன்னாள் சீன தூதுவர் வூ ஜியாங்கோ (Wu Jianghao) அவர்களும் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை சந்தித்தார்.

(English) Recent News

Most popular