Presidential Secretariat of Sri Lanka

“பௌத்தயா” அலை வரிசையை டிஜிட்டல் மயப்படுத்தல் ஜனாதிபதி தலைமையில்

இலங்கையின் முதலாவது பெளத்த தொலைக்காட்சி சேவையான “பௌத்தயா” அலை வரிசையை எனலொக் தொழிநுட்பத்திலிருந்து டிஜிட்டல் தொழிநுட்பத்திற்கு மாற்றும் நிகழ்வு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் இன்று (15) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அவர்களுக்கு ஆசிவேண்டி பூஜை நிகழ்வொன்றும் இதனோடு இணைந்ததாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விகாரைக்கு சென்ற ஜனாதிபதி அவர்கள், புனித தந்தத்தை வழிபட்டு, சமயக் கிரியைகளில் கலந்துகொண்டார். ஸ்ரீ சம்போதி விகாராதிபதியும் பௌத்தயா ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் சங்கைக்குரிய பொரலந்தே வஜிரஞான நாயக்க தேரர் சமயக் கிரியைகளை நடாத்தினார்.

விகாரையின் அபிவிருத்திப் பணிகள் குறித்து இடம்பெற்ற கலந்துரையாடலிலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார். அறநெறி பாடசாலையில் திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கிவைத்தார்.

 அமைச்சர்களான பந்துல குணவர்தன, சுசில் பிரேமஜயந்த, காமினி லொக்குகே, இராஜாங்க அமைச்சர் திலங்க சுமதிபால, முன்னாள் சபாநாயகர் டபிள்யு.ஜே.எம்.லொக்குபண்டார, முன்னாள் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.டி.சில்வா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News

Most popular