Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதியின் பெயரை பயன்படுத்தி அரச நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் அழுத்தம் பற்றி உடனடியாக அறியத்தரவும்

  • ஜனாதிபதி அலுவலகம் அறிவிப்பு

சில மோசடிக்காரர்கள் தமது நோக்கங்களை அடைந்துகொள்வதற்காக மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பெயர், போலியாக தயாரித்த கையொப்பம், போலியான கடிதத் தலைப்பு என்பவற்றை பயன்படுத்தி அமைச்சுக்கள், திணைக்களங்கள், அரச கூட்டுத்தாபனங்கள் உள்ளிட்ட அரச நிறுவனங்களுக்கு அழுத்தங்களை கொடுத்துவருவது பற்றி தொடர்ச்சியாக தகவல்கள் கிடைக்கப்பெறுகின்றன.

இத்தகைய நபர்கள் சில அரச நிறுவனங்களுக்கு தனிப்பட்ட முறையில் சென்று சில பணிகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக தெரியவந்துள்ளது. இந்த அழுத்தங்கள் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பணிப்புரையின் பேரிலேயே செய்யப்படுவதாகவும் அந்த மோசடிக்காரர்கள் தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி அலுவலகத்திற்கு தெரியவந்துள்ளது.

அரச பொறிமுறைக்கு வழங்கப்பட்டுள்ள கடமைப் பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றுவது குறித்து தனது பதவிக் காலத்தில் முன்னுரிமையளிக்கப்பட வேண்டும் என்றும், சில பணிகளை மேற்கொள்வதற்கான அதிகாரம் வழங்கப்பட்டுள்ள அதிகாரிகள் சட்டத்திற்கு அமைவாக, பொது மக்களின் தேவைகளை நிறைவேற்றும் வகையில் அரச பொறிமுறை செயற்பட வேண்டும் என்பதும் ஜனாதிபதி அவர்களின் கருத்தாகும்.

எனவே எவரேனும் மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் பெயரை பயனபடுத்தி அழுத்தங்களை மேற்கொள்வார்களேயானால் அது பற்றி உடனடியாக ஜனாதிபதி அலுவலகத்தின் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கே.பீ. எகொடவெலே (பணிப்பாளர் நாயகம், உள்ளக நிர்வாகம்) அவர்களுக்கு 0112354479/ 0112354354 என்ற இலக்கத்திற்கு அறியத்தருமாறு ஜனாதிபதி அலுலவலகம் அறிவித்துள்ளது.

(English) Recent News