Presidential Secretariat of Sri Lanka

இடுகம கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,250 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் இடுகம கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,250 மில்லியனாக அதிகரித்துள்ளது.

“Drive in Concert” கலை நிகழ்ச்சிக்கான அனுமதிச்சீட்டு விற்பனையின் மூலம் கிடைக்கப்பெற்ற பணத்தை பாதிய மற்று சந்தூஷ் ஆகியோர் உள்ளிட்ட ஏற்பாட்டுக் குழுவினர் இன்று (ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தனர்.

சட்டத்தரணி தனஞ்சய அபேவர்தன 100,000 ரூபாவையும், சபரகமுவ வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 226,919.67 ரூபாவையும், மேல் மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 1,450,484 ரூபாவையும், வட மத்திய மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை 158,746.53 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளதுடன், அதற்கான காசோலைகள் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

வட மத்திய தலைமை சங்க நாயக தேரர் சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ சங்கைக்குரிய மாவதவெவ குணானந்த தேரர் 100,000 ரூபாவையும், SJ Motors நிறுவனம் 30,000 ரூபாவையும், Isuru Traders (Pvt) Ltd நிறுவனம் 200,000 ரூபாவையும், The Colombo Plan நிறுவனம் 1,832,500 ரூபாவையும், சிறுமி ரொஹன்சா ஹெட்டியாரச்சி 7,500 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,250,306,569.16 ரூபாவாகும்.

 

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News