Presidential Secretariat of Sri Lanka

சுதேச மற்றும் கலாசார விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய ஊடக பயன்பாட்டின் அவசியத்தை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்

சுதேச மற்றும் கலாசார விழுமியங்களை பாதுகாக்கக்கூடிய ஊடக பயன்பாட்டின் அவசியத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்

இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் முன்னேற்றம் தொடர்பான கலந்துரையாடலின்போதே ஜனாதிபதி அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

புதிய தொழிநுட்பத்தை அடிப்படையாகக்கொண்ட தொலைக்காட்சி ஒளிபரப்பு ஒன்றுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் அறிவை வளர்க்கக்கூடிய நிகழ்ச்சிகளை தயாரிப்பதன் அவசியத்தை பற்றியும் இங்கு கலந்துரையாடப்பட்டது. தேர்தலுக்கு முன்னர் மக்களுக்கு முன்வைத்த “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கை பிரகடனத்தை மக்களில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொண்டனர். அதனால் தனது கொள்கையை எடுத்துக்காட்டுவதற்கு அப்பால் தனது அரசாங்கம் செயற்படுத்தி வருகின்ற கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ள அடிப்படைத்தத்துவத்தை மக்களுக்கு எடுத்துச் சொல்வதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.

வெளிநாட்டு நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதற்கு தெரிவு செய்யும்போது பின்பற்றப்பட வேண்டிய முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டினார்.

சுயாதீன தொலைக்காட்சி ஊடக வலையமைப்பின் தற்போதைய நிலை, எதிர்கால செயற்திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

சுயாதீன தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் சுதத் ரோஹன, நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹசந்த ஹெட்டியாரச்சி, பிரதான நிறைவேற்று அதிகாரி நளின் குமார நிஷங்க ஆகியோருடன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களும் சிரேஷ்ட அதிகாரிகளும் இக்கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

(English) Recent News

Most popular