Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதியை போரா சமூகத்தின் தலைவர் சந்தித்தார்…

போரா சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் கலாநிதி செய்யதினா முஃபத்தல் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களை, இன்று (11) முற்பகல், மிரிஹானையில் அமைந்துள்ள ஜனாதிபதியின் இல்லத்தில் சந்தித்தார்.

சுமார் ஒரு மில்லியன் போரா சமூகத்தின் உறுப்பினர்கள், இந்தியா, பாகிஸ்தான், அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், கெனடா, இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் வசிக்கின்றனர். இந்நிலையில், தான் மிகவும் நேசிக்கின்ற இலங்கைக்கு வந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதோடு, எதிர்காலத்திலும் தமது சீடர்களுடன் இந்நாட்டுக்கு வருகைதர எதிர்பார்த்திருப்பதாகவும் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்டு வரும் கொவிட் தொற்றொழிப்புக்கான நடவடிக்கைகளுக்குப் பாராட்டுத் தெரிவித்த சஹெப் அவர்கள், இலங்கையின் வளர்ச்சியைத் தான் எதிர்ப்பார்த்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

கொவிட் 19 – செய்கடமை அறக்கட்டளைக்கு, போரா சமூகத்தின் தலைவர் செய்ஃபுத்தீன் சஹெப் அவர்கள் வழங்கிய உதவிக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி அவர்கள், முதலீடுகள் மற்றும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு, இந்நாட்டின் பொருளாதாரத்துக்கு போரா சமூகத்தினர் வழங்கும் ஒத்துழைப்புகளுக்கும் ஜனாதிபதி அவர்கள் பாராட்டுத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள் மற்றும் போரா சமூகத்தின் உறுப்பினர்கள் சிலரும், இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News

Most popular