கொழும்பு கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் நேற்று (23) கலந்துகொண்டார்.
59வது வருடாந்த எசல பெரஹெர பாரம்பரிய சடங்குகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி மத வழிபாடுகளிலும் ஈடுபட்டார்.
பாரம்பரிய சடங்குகளைத் தொடர்ந்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களுக்கு சந்தன மரத்தால் செய்யப்பட்ட புத்தர் சிலையை ஊவா மாகாண பிரதம சங்க நாயக்கவும் கொள்ளுபிட்டி வாளுக்காராம விஹாரையின் விஹாராதிபதியுமான மஹரகம நந்தநாயக்க தேரர் மற்றும் உடவௌ கோலித தேரர் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.
கோட்டே ஶ்ரீ கல்யாணி சாமக்ரி தர்ம மஹா சங்கத்தின் மஹாநாயக்க தேரர், ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி அதி வணக்கத்துக்குரிய இத்தேபன தம்மாலங்கார நாயக்க தேரர் ஆகியோரும் இப்பாரம்பரிய சடங்குகளில் பங்கெடுத்தனர்.
மேலும் இப்பாரம்பரிய சடங்குகளில் பிரதமர் தினேஷ் குணவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்கிரமநாயக்க, ஐக்கிய தேசியக்கட்சியின் தவிசாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் மற்றும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, இலங்கைக்கான மியன்மார் தூதுவர், முன்னாள் அமைச்சர்களான தயா கமகே, அனோமா கமகே ஆகியோரும் கலந்து கொண்டனர்.