Presidential Secretariat of Sri Lanka

இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்க ஜனாதிபதி அறிவுறுத்தல்

நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சர் என்ற வகையில், இறக்குமதி செய்யப்படும் பேரீச்சம்பழத்திற்கு விதிக்கப்பட்டிருந்த விசேட பண்டங்கள் வரியைக் குறைக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் பணிப்புரை விடுத்துள்ளார்.

எதிர்வரும் ரமழான் பண்டிகை காலத்திற்கான நிவாரண நடவடிக்கையாக ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இதன்படி, 01 கிலோ பேரீச்சம்பழத்திற்கு 200 ரூபா வீதம் விதிக்கப்பட்டிருந்த வரி , 01 கிலோவுக்கு 01 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.

அந்நியச் செலாவணி செலவிடப்படாத வகையில், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பரிந்துரையின் பேரில் பல்வேறு நாடுகள், நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்கள், தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் நலன் விரும்பிகளிடமிருந்து அன்பளிப்புகள் அல்லது நன்கொடைகள் மூலம் பெறப்படும் பேரீச்சம்பழத்திற்கு மட்டுமே இந்த வரி விலக்கு பொருந்தும்.

இன்று (08) முதல் அமுலுக்கு வரும் வகையில் 2022 நவம்பர் 30 ஆம் திகதி வெளியிடப்பட்ட இலக்க 2308/17 வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் ஜனாதிபதியினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

(English) Recent News

Most popular