Presidential Secretariat of Sri Lanka

காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைய முடியாது- சாகல ரத்நாயக்க

காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்யவில்லையெனில் நிலையான பொருளாதார அபிவிருத்தி இலக்குகளை அடைவது சாத்தியமற்றது என என தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க தெரிவித்தார்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் இன்று (24) காலை LEO Youth Vision 2048 மற்றும் கொழும்பு LEO கழகம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்திருந்த 10,000 மரக் கன்றுகளை நடும் வேலைத்திட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கொழும்பிலுள்ள பிரதான பாடசாலைகள் பலவற்றுக்கும் மரக் கன்றுகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.

LEO Youth Vision 2048 கழக்கத்தின் தலைவர் செனுல தீலன உள்ளிட்ட LEO கழக உறுப்பினர்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்வதன் மூலம் பொருளாதார அபிவிருத்திக்கு பங்களிப்புச் செய்ய முடியும் என்ற வகையில் சகலரும் அது தொடர்பிலான புரிதல் மற்றும் அர்பணிப்புடன் செயற்பட வேண்டியது அவசியம் எனவும் சாகல ரத்நாயக்க வலியுறுத்தினார்.

மேலும் கருத்து தெரிவித்த சாகல ரத்னநாயக்க,
இந்த நிகழ்விற்கு எனக்கு அழைப்பு விடுத்த கல்வி அமைச்சருக்கு நன்றிகள். நீண்ட காலத்திற்கு பின்னரே இந்த மேடைக்கு வந்திருந்தாலும், பழைய நிகழ்வுகள் பல இன்றும் நினைவில் நிற்கின்றன. இந்த மேடையில் எத்தனை தடவைகள் ஏறியிருப்பேன் என்பது நினைவில்லாவிட்டாலும் மாணவத் தலைவராகவும் சிரேஷ்ட மாணவத் தலவைராகவும் இங்கு இடம்பெற்ற கல்விசார செயற்பாட்டு மூலம் பல்வேறு அனுபவங்களை பெற்றுக்கொண்டேன்.

அதுவே எனது அரசியல் செயற்பாடுகளிலும் பெரும் பலமாக அமைந்திருந்திருக்கிறது. அத்தோடு இவை ஆளுமைத் திறனையும் தந்தது என நம்புகிறேன். அதேபோல் மாணவத் தலைவர்களாக வரும் மாணவர்கள் கல்விச் செயற்பாடுகளில் சிறந்த முறையில் முன்னெடுப்பதுடன் நாட்டின் தலமைத்துவத்தை ஏற்றுக்கொள்ளவும் முன்வருவார்கள் என எதிர்பார்க்கிறேன்.

ரோயல் கல்லூரி மாணவர்களுக்கு கடந்த சில நாட்கள் மிகச் சிறப்பான நாட்களாக அமைந்திருந்தன. ரோயல் மற்றும் புனித தோமஸ் அணிகளுக்கிடையிலான சமரில் வெற்றி கிட்டியது. ஒரு தேசம் என்ற வகையில் நமது நாடு இனியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாடு அல்ல என்ற நற்செய்தியும் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நமக்கு கிடைக்கப்பெற்றது.

சர்வதேச நாணய நிதிய நிறைவேற்றுக் குழுவின் நீடிக்கப்பட்ட கடன் வசதிகள் கிடைக்கப்பெற்றதை இலங்கையின் வேலைத்திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே பலரும் காண்கின்றனர். ஆனால் மிகையான சலுகைகளுடன் நீண்ட காலத்திற்குள் செலுத்தி முடிக்க வேண்டிய கடனாகவே இதனை நாம் காண்கிறோம். இது மிகவும் சவாலான ஒரு வேலைத்திட்டம் என்ற வகையில் சர்வதேச சமூகம் எமக்கு வழங்கியுள்ள அங்கீகாரத்திற்கு நாம் மதிப்பளிக் வேண்டும். பல நாடுகள் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ள போதும் இந்த இலக்கை அடையும் இயலுமை அவர்களுக்கு கிட்டவில்லை. கொவிட் போன்ற பல சவால்களை நம்மை போன்ற பல நாடுகள் எதிர்கொண்ட போதும் அந்த நிலையிலிருந்து நாம் துரிதமாக மீண்டெழுந்துள்ளோம். இருப்பினும் நாம் இந்த பயணத்தில் நெடுந்தூரம் செல்ல வேண்டியிள்ளது.

அதற்கமைய இலங்கைக்கு வருகின்ற முதலீட்டாளர்கள் இலகுவான முறையில் முதலீடுகளை மேற்கொள்வதற்கு உகந்த வகையில் நமது பொருளாதார வரைவுகளை வடிவமைக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்காக நாம் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும். அனைத்து தரப்பினரும் நம்பிக்கை கொள்ளும் ஆடுகளமாக இலங்கையை மாற்றியமைக்க வேண்டும்.

முதலீடுகளை ஊக்குவித்தன் ஊடாகவே நாட்டை அபிவிருத்தி பாதையில் இட்டுச் செல்ல முடியும். நாளைய சந்ததியினருக்கான வளமான எதிர்காலத்தையும் தோற்றுவிக்க முடியும். உங்களது வளமான எதிர்காலத்திற்கு அத்திவாரம் இடும் நோக்கிலேயே நாம் இப்பணிகளை செய்கிறோம்.

எனவே, இது தொடர்பான புரிதலுடன் கூடிய உங்களது பங்களிப்பு எமக்கு அவசியமாகும். அந்த வகையில் கொழும்பு ரோயல் கல்லூரியின் லியோ கழகத்தினரால் முன்னெடுக்கப்படும் 10000 மரக் கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தில் பங்கெடுக்க கிடைத்தமையையிட்டு நான் மகிழ்ச்சியடைகின்றேன். ஜனாதிபதியின் பிறந்த தினத்தை முன்னிட்டு இவ்வாறானதொரு திட்டத்தை முன்னெடுத்தமைக்கு நன்றிகள்.

காலநிலை அனர்த்தங்கள் எதிர்காலத்தில் முக்கிய காரணியாக விளங்கக்கூடும் என்ற வகையில் இது தொடர்பாக அவதானம் செலுத்த நாம் தவறினாலும் அதிலிருந்து மீள்வதற்கான திடமான முயற்சிகளை மேற்கொள்ள தவறினாலும் எமது மீள் எழுச்சியும் பொருளாதார வளர்ச்சியும் தற்காலிகமானதாக மாத்திரமே அமைந்துவிடும்.

அதனால் காலநிலை அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்துகொள்வது பொருளாதார வளர்ச்சிக்கு செய்யும் பங்களிப்பாக அமையும். அனர்த்தங்களை முகாமைத்துவம் செய்துகொள்ளும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயற்படும் பலரும் இவ் உலகில் உள்ள நிலையில் அவர்களுக்கான ஊக்குவிப்புக்கள் மற்றும் நிதி வழங்கள் செயற்பாடுகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்த நிதி நெருக்கடியினால் நாம் கடந்த சில மாதங்களுக்குள் பிணைமுறி நெருக்கடிக்கு நிகரான சிக்கல்களுக்கு உள்ளாகியுள்ளதாக கருத்துகள் வெளியிடப்பட்டன. அதனால் எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் தலைமைத்துவ செயற்பாடுகளை ஏற்று நடத்துவதற்கு முன்வந்துள்ளமை குறித்து நன்றிகளை தெரிவிக்கிறேன்.

பல்வேறு கல்விசாரா செயற்பாடுகள் ஊடாகவும் சகோதரத்துவத்துடனும் ஒன்றுபட்டிருந்த போதும் இன்று தொடர்பாடல் வசதிகளுடன் தொழில்நுட்ப குழுக்களிலும் இணைந்துள்ளோம்.

அந்த வகையில் மேற்படித் திட்டத்தை பாடசாலைகளின் கல்விசாரா செயற்பாடுகளில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம் என்ற வகையில் லியோ கழகத்தின் தலைவர் செனுல உள்ளிட்ட இத்திட்டத்தில் பங்கெடுத்த அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளை தெரிவிக்கிறேன்.

அதேபோல் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை கூறிக்கொள்வதுடன், நாம் இந்நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்கான பணிகளை ஆற்றிவரும் நிலையில் அதனுடன் இணைந்துகொள்ளுங்கள் என அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கிறோம்.

கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, கொழும்பு ரோயல் கல்லூரியின் அதிபர் ஆர்.எம் ரத்நாயக்க உள்ளிட்ட பேராசிரியர்கள், கல்லூரியின் சிரேஷ்ட மாணவத் தலைவர் கவிஷ ரத்நாயக்க உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.

(English) Recent News