Presidential Secretariat of Sri Lanka

பிலிப் குணவர்தனவின் 51 ஆவது நினைவுதின நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

தலைசிறந்த அரசியல்வாதியும் முன்னாள் அமைச்சருமான பிலிப் குணவர்தனவின் 51ஆவது நினைவுதின நிகழ்வு நேற்று (29) பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

பிலிப் குணவர்தன நினைவுதின நிகழ்வுக்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை, பிரதமர் தினேஷ் குணவர்தன வரவேற்று, விழா மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார்.

நினைவுதின நிகழ்வில், ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் ஜயந்த லால் ரத்னசேகர மற்றும் வரலாற்றாசிரியர், கலைத்துறை விசாரத மற்றும் சர்வதேச திரைப்பட விருது பெற்றவருமான கலாநிதி சிங்கராஜ தம்மித்த தெல்கொட ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

பிலிப் குணவர்தன அவர்களின் வாழ்க்கை பற்றிய குறுந்திரைப்படமும் திரையிடப்பட்டதுடன், பிலிப் குணவர்தனவிற்காக உருவாக்கப்பட்ட பாடலும் வெளியிடப்பட்டது.

கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் வண. முருத்தெட்டுவே ஆனந்த தேரர், எல்கே குணவங்ச தேரர், பெல்லங்வில ரஜமஹா விகாராதிபதி கலாநிதி வண. பெல்லங்வில தம்மரதன தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினர் மற்றும் ஏனைய மதத் தலைவர்கள், முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, அமைச்சர்களான நிமல் சிறிபால , பவித்ரா தேவி வன்னியாரச்சி, இராஜாங்க அமைச்சர்களான ஜானக வக்கும்புர, கீதா குமாரசிங்க, டி.பி. ஹேரத், அனுப பஸ்குவல், பாராளுமன்ற உறுப்பினர்களான சமல் ராஜபக்ஷ, டிலான் பெரேரா, வஜிர அபேவர்தன, லக்ஷ்மன் கிரியெல்ல, துமிந்த திஸாநாயக்க, ரவூப் ஹக்கீம், எஸ்.எம். சந்திரசேன, குமார வெல்கம, டலஸ் அழகப்பெரும, தயாசிறி ஜயசேகர, ரோஹித அபேகுணவர்தன, இம்தியாஸ் பாக்கீர் மாக்கார், ரஞ்சித் மத்துமபண்டார, கெவிந்து குமாரதுங்க, யதாமினி குணவர்தன, மற்றும் அமைச்சர்கள், தூதுவர்கள், ஆளுநர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News