Presidential Secretariat of Sri Lanka

சிரேஷ்ட அரச அதிகாரிகளுக்கான நிறைவேற்று மட்ட சிட்ரா புலமைப்பரிசில் திட்டம் வெளியிடப்பட்டது

ஒரு நாட்டின் அபிவிருத்தி இலக்குகளை அடைய வலுவான பொதுச் சேவையின் அவசியத்தை உணர்ந்து, சிட்ரா புத்தாக்க ஆராய்ச்சி நிறுவனம், அரச சேவையில் சிறந்து விளங்குவதற்கான சிட்ரா புலமைப்பரிசில் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

30 சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுக்கான இந்த நிறைவேற்று மட்டப் புலமைப்பரிசில் திட்டத்தில் பிரதமரின் செயலாளர் அனுர திஸாநாயக்க, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சந்திம விக்கிரமசிங்க, நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பிள்டன், நியூசிலாந்தின் முன்னாள் சிவில் சேவை ஆணையாளர் இயன் ரெனி மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோட்டா ஆகியோரின் தலைமையில் கடந்த மாதம் 30 ஆம் திகதி அஹுங்கல்ல ஹெரெடேஜ் ஹோட்டலில் ஆரம்பிக்கப்பட்டது.

நடைமுறைச் செயல்பாடு அடிப்படையிலான, அனுபவ கற்றல் முறைகளைப் பயன்படுத்தி இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு நவம்பர் 03 வரை நடைபெறும்.

2048 ஆம் ஆண்டளவில் அபிவிருத்தியடைந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கு தேவையான அரச அதிகாரிகளை நாட்டில் உருவாக்கும் வகையில் ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் அலுவலகம் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.

பல்வேறு அமைச்சுக்களில் பணிபுரியும் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட உதவிச் செயலாளர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளை இலக்காகக் கொண்டு , எதிர்காலத்தில் அரசு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பரந்த பங்கை வலியுறுத்தும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் எதிர்கால அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்குத் தேவையான திறன்கள், அறிவு மற்றும் அணுகுமுறைகளுடன் அரச சேவையை வலுப்படுத்துவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், இலங்கை மற்றும் உலகளவில் 7 நாடுகளில் உள்ள 95 உறுப்பினர்களைக் கொண்ட வலையமைப்பிலும், 900க்கும் மேற்பட்ட அரசாங்க அதிகாரிகளின் வலையமைப்பிலும் தங்கள் துறைகள் மற்றும் நிறுவனங்களுக்குள் புத்தாக்கம், மூலோபாய தொலைநோக்கு மற்றும் டிஜிட்டல் திறன்களை பரிந்துரைக்கின்றனர்.

இந்தத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள், உலகெங்கிலும் உள்ள மற்ற ஏழு நாடுகளைச் சேர்ந்த 95க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள் இந்த வலையமைப்புடன் இணைக்கப்படுவார்கள். தங்கள் சார்ந்த துறைகள் மற்றும் நிறுவனங்களுக்குள் மேற்கொள்ளப்படும் புத்தாக்கங்கள், மூலோபாய கொள்கைகள், டிஜிட்டல் திறன்கள் மற்றும் கருவிகள் தொடர்பில் இவர்கள் செயற்பட இருப்பதோடு 900 க்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகளை கொண்ட வலையமைப்புடன் தொடர்புபடுத்துவர்.

இந்தத் திட்டத்திற்காக, தற்போதுள்ள சிட்ரா கண்டுபிடிப்பு ஆராய்ச்சி நிறுவனத்திலுள்ள வளவாளர்களுக்கு மேலதிகமாக, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, இந்தியா மற்றும் மால்டோவா போன்ற நாடுகளைச் சேர்ந்த வளவாளர்களினதும் பங்களிப்பைப் பெற உள்ளனர்.

சிட்ரா இலங்கையின் முதல் சமூக புத்தாக்க ஆய்வகம் என்பதோடு இது ஜனாதிபதி அலுவலகம், பிரதமர் அலுவலகம் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தித் திட்டம் (UNDP) ஆகியவற்றின் கூட்டுத் திட்டமாக முன்னெடுக்கப்படும்.

(English) Recent News