Presidential Secretariat of Sri Lanka

ஜனாதிபதி வரலாற்று முக்கியத்துவமிக்க சோமாவதி புண்ணிய பூமிக்கு விஜயம்

மக்களுக்கும் நாட்டுக்கும் ஆசி வேண்டி பொலன்னறுவையில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சோமாவதி விகாரையில் இன்று (30) முற்பகல் இடம்பெற்ற சமயக் கிரியைகளில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் பங்குபற்றினார்.

சோமாவதி புண்ணிய பூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி அவர்கள் ரஜமகா விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய பஹமுனே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்தித்து ஆசிர்வாதங்களை பெற்றுக்கொண்டார்.

சோமாவதி விகாரையில் இடம்பெற்ற பூஜை நிகழ்விலும் ஜனாதிபதி அவர்கள் பங்குபற்றினார்.

சோமாவதி புண்ணிய பூமி பெரும்பாலான சந்தர்ப்பங்களில் வெள்ள நிலைமைக்கு உட்படுவதுண்டு. சோமாவதி விகாரையின் விகாராதிபதியின் கோரிக்கையின் பேரில்  அத்தகைய அனர்த்த நிலைமைகளின் போது உதவக்கூடிய வகையில் விமானப் படையினால் நிர்மாணிக்கப்பட்ட ‘ஹெலிகப்டர் இறங்குதளத்தையும்’ ஜனாதிபதி அவர்கள் திறந்துவைத்தார். விமானப் படைத்தளபதி எயார் மார்ஷல் சுமங்கள டயஸ் அவர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

(English) Recent News

Most popular