Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,386 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் -19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1,386 மில்லியனாக அதிகரித்துள்ளது.

ஊழியர் நம்பிக்கை நிதியச் சபை பணிக்குழாம் 2,000,000 ரூபாவையும், சிறுமி டபிள்யு.எம். இசினி டெக்லா வர்ணசூரிய 6,300 ரூபாவையும், திரு. எச்.ஆர் ஆரியவங்ச 500 ரூபாவையும், அநுராதபுர மாநகர சபை பிரதி மேயர் திரு. எம்.டபிள்யு புத்திக பிரேமதாச அவரது மூன்று மாத சம்பளமான 88,825 ரூபாவையும், தேசிய வீடமைப்பு அதிகார சபை பணிக்குழாம் 2,500,000 ரூபாவையும், Sri Lanka Association of Inbound Tour Operators நிறுவனத்தின் உறுப்பினர்கள் 1,000,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். இதற்கான காசோலைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் இன்று (17) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டன.

பாணதுரை சுமங்கல பாலிகா மகா வித்தியாலய பழைய ஆசிரியர்கள் 325,000 ரூபாவையும்,  Ocean Lanka (Private) Limited நிறுவனம் 1,000,000 ரூபாவையும், U P Building Construction நிறுவனம் 400,000 ரூபாவையும், திரு. எஸ்.ஏ. தர்மசேன தம்பதியினர் 100,000 ரூபாவையும், திரு. மஹங்க சமரசிங்க தம்பதியினர் 200,000 ரூபாவையும், ராஜகிரிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவுசெய்த ஜப்பானில் இருந்து வருகை தந்தவர்கள் 47,500 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,386,634,166.06 ரூபாவாகும்.

உள்நாட்டு வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்துவருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular