Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1456 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1456 மில்லியனாக அதிகரித்துள்ளது.

மதுவரி திணைக்களம் 3,500,000 ரூபாவையும் செல்வி.என்.டப்ளியு.சித்துமி சாவிந்தி 5,000 ரூபாவையும் திருமதி எச்ஜி.புஷ்பா 5,000 ரூபாவையும் திரு.கே.ஜி.அபயவர்தன 5,000 ரூபாவையும் இந்நிதியத்திற்கு அன்பளிப்பு செய்துள்ளனர். குறித்த காசோலைகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

எலதெனிய எக்சத் புராண போதி அபிவிருத்தி சங்கம் 1,000,000 ரூபாவையும் பேராசிரியர் நாரத வர்ணசூரிய 200,000 ரூபாவையும் திரு.ஏ.டப்ளியு.ஜே.நிஷாந்த 777 ரூபாவையும் பாணந்துறை பிரதேச செயலகம் 57,000 ரூபாவையும் இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் திருமதி.எம்.ஆர்.வை.கே.உடவல 20,000 ரூபாவையும் மீரிகம ராஜபக்ஷ அடகு நிலையம் 500,000 ரூபாவையும் பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் 33,580.18 ரூபாவையும் திரு.எச்.பி.ஜி.எஸ்.பிரேமரத்ன 10,048.33 ரூபாவையும் திரு.டி.எஸ்.அமரசிங்க 1,000 ரூபாவையும் ஏற்றுமதி கமத்தொழில் திணைக்களம் 940,415.89 ரூபாவையும் நிதி ஆணைக்குழு 43,598 ரூபாவையும் மற்றும் திருமதி ஜொஸ்லின் கம்மெதகே 200,000 ரூபாவையும் அன்பளிப்பு செய்துள்ளனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,456,865,619.45 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular