Presidential Secretariat of Sri Lanka

‘‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1549 மில்லியனாக அதிகரிப்பு

தனிப்பட்ட, நிறுவன அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் ‘இடுகம’ கொவிட் – 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 1549 மில்லியனாக அதிகரித்துள்ளது.

ஸ்ரீ நாகல ரஜமகா விகாராதிபதி சங்கைக்குரிய வரத்தன தம்மானந்த தேரர் 100,000 ரூபாவையும் திம்புல ஆரன்ய சேனாசனாதிபதி சங்கைக்குரிய தொலுவே தம்மரத்தன தேரர் 25,000 ரூபாவையும் கொட்டவகம ஸ்ரீ போதிராஜாராம விகாராதிபதி சங்கைக்குரிய யட்டலமத்தே தம்மிஸ்ஸர தேரர் 60,000 ரூபாவையும் வடமேல் மாகாண சபையின் அரச அதிகாரிகள் 22,686,240.82 ரூபாவையும் திரு.எச்.எம்.கமல் குமார ஹேரத் 45,039.80 ரூபாவையும் திரு.எஸ்.எஸ்.பி.எம். கிரிபண்டா 5,000 ரூபாவையும் மற்றும் திரு.எஸ்.ஜே.அசங்க மதுசங்க 5,000 ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்தனர். குறித்த அன்பளிப்புகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

செல்வி.பி.டி.கோகிலா செவ்வந்தி 833 ரூபாவையும் செல்வி என்.எம்.மினுதி சிகஷ்னா நாயக்க ரத்ன 3,027 ரூபாவையும் சிறுவன் ஏ.எம்.சனுக்க மிஹிஜெய அதிகாரி 1,251 ரூபாவையும் செல்வி டப்ள்யு.ஜி.பகன்தி இமாஷா 966 ரூபாவையும் சிறுவன் சமல் சந்து பண்டார மற்றும் கசுந்த கிகன்த 1,007 ரூபாவையும் தமது பண உண்டியல்கள் மூலம் ஜனாதிபதி அவர்களிடம் கைளித்தனர்.

தற்போது இடுகம கொவிட் 19 சுகாதார, பாதுகாப்பு நிதியத்தின் மீதி 1,549,669,455.13 ரூபாவாகும்.

உள்நாட்டு, வெளிநாட்டு நன்கொடையாளர்கள் இக்கணக்கிற்கு பங்களிப்பு செய்து வருகின்றனர். காசோலைகள் அல்லது டெலிகிராப்கள் மூலமும் www.itukama.lk என்ற இணையத்தளத்தின் ஊடாகவோ அல்லது #207# என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு பங்களிப்பை செய்ய முடியும். 0760700700/ 0112320880/ 0112354340/ 0112424012 என்ற இலக்கங்களுடன் தொடர்புகொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக்கொள்ள முடியும்.

(English) Recent News

Most popular