Presidential Secretariat of Sri Lanka

பாதுகாப்பு செயலாளரினால் எழுதப்பட்ட இரண்டு நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு…

பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் எழுதப்பட்ட “பாதாளயோ” (பாதாள உலகத்தினர்) என்ற நாவலும் “கோட்டாபய” என்ற நூலின் ஆங்கில பிரதியும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

உண்மையான பல நிகழ்வுகளை அடிப்படையாக்கொண்டு “பாதாளயோ” என்ற நாவல் எழுதப்பட்டுள்ளது. “கோட்டாபய” என்ற சிங்கள நூல் கடந்த வருடம் வெளியிடப்பட்டிருந்ததுடன், இம்முறை அதன் ஆங்கில பிரதி வெளியிட்டு வைக்கப்பட்டது. இரு நூல்களினதும் வெளியீட்டு நிகழ்வு நேற்று (06) பிற்பகல் கொழும்பு ஆனந்தா கல்லூரியின் குலரத்ன மண்டபத்தில் இடம்பெற்றது.

கமல் குணரத்னவினால் இதற்கு முன்னர் “நந்திக்கடல் வழியே” என்ற சிங்கள மொழி மூலமான நூலும் அதன் ஆங்கில பிரதியான “Road To Nandikadal” உட்பட “கடொல் எத்து”, “உத்தர தேவி”, “கோட்டாபய” ஆகிய ஐந்து நூல்கள் எழுதப்பட்டுள்ளன. “பாத்தாளயோ” மற்றும் “GOTABAYA” ஆங்கிலப் பிரதி அவரினால் எழுதப்பட்ட 6வதும் 7வதும் நூல்களாகும்.

இரண்டு நூல்களினதும் முதற் பிரதிகள் கமல் குணரத்னவினால் ஸ்ரீ கல்யாணி சாமகிரி தர்ம மகா சங்க சபையின் மகாநாயக்க தேரர் சங்கைக்குரிய இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர் உள்ளிட்ட மகாசங்கத்தினருக்கு வழங்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

கமல் குணரத்ன அவர்கள், தனது இராணுவ சேவைக்காலப் பகுதியில் ஆசிரியர்களாக கருதும் தாய் நாட்டுக்காக தமது உயிர்களை தியாகம் செய்த லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மற்றும் மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன ஆகியோரின் சார்பில் அவர்களது பாரியார்களுக்கு அந்த நூல்களை சமர்ப்பனம் செய்தார்.

ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க அவர்கள் நிகழ்வில் ஆரம்ப உரையாற்றினார். ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவரும் சிங்கள மொழி தொடர்பான கலாநிதி விஸ்வ ராஜபக்ஷ அவர்களினால் ஆசிரியர் பற்றிய அறிமுகம் இடம்பெற்றது. நேற்றைய தினம் கமல் குணரத்ன அவர்களின் பிறந்த தினம்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், அமைச்சர்களான சமல் ராஜபக்ஷ, பந்துல குணவர்தன, மஹிந்தானந்த அழுத்கமகே, சரத் வீரசேகர, நாலக்க கொடகேவா ஆகியோரும் அமைச்சுக்களின் செயலாளர்கள் முன்னாள் இராணுவத் தளபதிகள், தற்போதைய தளபதிகள் உள்ளிட்ட பாதுகாப்புத்துறை முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(English) Recent News